Advertisment

தமிழக பொதுப்பணித்துறையில் அப்ரன்டீஸ் பயிற்சி : இஞ்ஜினியரிங், டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்...

இஞ்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகள் 2017,2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
engineering, diploma, graduates, apprenticeship training, public works department, இஞ்ஜினியரிங், டிப்ளமோ, பட்டதாரிகள், அப்ரன்டீஸ் பயிற்சி, பொதுப்பணித்துறை

engineering, diploma, graduates, apprenticeship training, public works department, இஞ்ஜினியரிங், டிப்ளமோ, பட்டதாரிகள், அப்ரன்டீஸ் பயிற்சி, பொதுப்பணித்துறை

தமிழக பொதுப்பணித்துறையில் அளிக்கப்பட உள்ள அப்ரன்டீஸ்ஷிப் (தொழில்பழகுநர்) பயிற்சிக்கு இஞ்ஜினியரிங் துறையில் பட்டம் மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisment

இஞ்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகள் 2017,2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

மொத்த பணியிடங்கள் : 500

இஞ்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான அப்ரன்டீஸ்ஷிப் பயிற்சி

துறைவாரியான பணியிடங்கள் விவரம்:

1. Civil Engineering - 315

2. Electrical and Electronics Engineering - 35

தகுதி: இஞ்ஜினியரிங் துறையில் சிவில், எல்க்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 வழங்கப்படும்.

இஞ்ஜினியரிங் டிப்ளேமாவிற்கான அப்ரன்டீஸ்ஷிப் பயிற்சி

1. Civil Engineering - 135

2. Electrical and Electronics Engineering - 15

தகுதி: இஞ்ஜினியரிங் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3542 வழங்கப்படும்.

வயது வரம்பு : அப்ரன்டீஸ்ஷிப் விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : ஆன்லைன் விண்ணப்ப விபரங்களை கொண்டு மதிப்பெண், தேவையான தகுதிகளை கொண்டு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது இமெயில் ஐடி மூலம் அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்படுவர்.

முக்கிய தேதிகள்

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க துவங்கும் தேதி : ஜூன் 10, 2019

NATS போர்டலில் விண்ணப்பிக்க கடைசி தேதி - ஜூன் 24, 2019

தமிழக பொதுப்பணித்துறையில் விண்ணப்பிக்க கடைசி தேதி - ஜூன் 26, 2019

தேர்வான மாணவர்கள் குறித்த பட்டியல் வெளியீடு - ஜூலை 1, 2019

தேர்வான மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள் - ஜூலை 8 முதல் 10ம் தேதி வரை

அப்ரன்டீஸ்ஷிப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் http://boat-srp.com/ இணையதளத்தில் ஜூலை 16ம் தேதி வெளியிடப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2019/06/PWD-2019-20-Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment