Advertisment

கேட், சிஇஇ; இஞ்ஜினியரிங் பட்டமேற்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுகளின் பட்டியல்

Engineering entrance exams 2020: தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான கேட் போன்றவற்றுக்கு மத்தியில் பல்வேறு மாநிலங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், இஞ்ஜினியரிங் பட்டமேற்படிப்புக்காக சொந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Exam Scam, TNPSC 2020

TNpsc Group I preparation, Syllabus, Tnpsc Group I Current Affairs

Engineering entrance exams 2020: இஞ்ஜினியரிங் நுழைவு தேர்வுகள் 2020; தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான கேட் போன்றவற்றுக்கு மத்தியில் பல்வேறு மாநிலங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், இஞ்ஜினியரிங் பட்டமேற்படிப்புக்காக சொந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. பட்டமேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவு தேர்வுகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Advertisment

அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும் படிப்புகளில் ஒன்றாக தொடர்ந்து இஞ்ஜினியரிங் முதலிடம் வகிக்கிறது. தேசிய அளவிலான இஞ்ஜினியரிங் பட்டப்படிப்பு திறன றியும் தேர்வு(Graduate Aptitude Test in Engineering (GATE),)-க்கு மத்தியில் பல்வேறு மாநிலங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் பட்டமேற்படிப்பு இஞ்ஜினியரிங் படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான சொந்தமாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.

ஐஐடி-களில் எம்.டெக் படிப்புக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதர இஞ்ஜினியரிங் நுழைவுதேர்வுகள் மற்றும் அதன் உறுதிப்படுத்தப்படாத தற்காலிக அட்டவணையையும் இங்கு பார்க்கலாம்.

கேட் 2020(GATE 2020); இஞ்ஜினியரிங் பட்டப்படிப்பு திறன றியும் தேர்வு(Graduate Aptitude Test in Engineering (GATE),) என்பது இஞ்ஜினியரிங், தொழில்நுட்பம், கட்டிடவியல், இந்திய அறிவியல் மையத்தின்(IISc) இதர பிரிவுகள், இந்திய தொழில்நுட்ப மையம்(IIT) ஆகியவற்றில் நேரடியாக முனைவர் பட்டம் பெறுவதற்கும் பட்டமேற்படிப்பு படிப்பதற்குமான மாணவர் சேர்க்கைக்கு ஒரு வழி முறையாகும். கேட் 2020 மதிப்பெண் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெறலாம். இஞ்ஜினியரிங்கில் மிகவும் விரும்பப்படும் தேர்வுகளில் இது ஒன்றாகும்.

ஐஐஐடிஎச் பி.ஜி.இ.இ 2020 (IIITH PGEE 2020 ); ஐதராபாத்தில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப மையம், தங்கள் மையத்தில் பட்டமேற்படிப்பு இஞ்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்காக ஒவ்வொரு ஆண்டும் பட்டமேற்படிப்பு நுழைவுத் தேர்வை நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதற்கான பதிவு இந்தக் கல்வி நிறுவனத்தின் iiit.ac.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி மாதம் தொடங்கும். தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. கடந்த முறை 2018ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி நாடு முழுவதும் பல நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.2000.

ஏபி பிஜிஇஒஇடி2020(AP PGECET 2020); விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகம், இஞ்ஜினியரிங் பட்டமேற்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை வரும் 2020 மே மாதம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு மார்ச் மாதம் தொடங்கும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு இந்த தேர்வு மே 2 முதல் 4-ம் தேதி வரை நடத்தப்பட்டது. ஆந்திர மாநில அரசின் உயர் கல்வி கவுன்சில் சார்பாக விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகம் AP PGECET தேர்வை வெற்றிகரமாக நடத்துகிறது.

எஸ்.ஆர்.எம் ஜேஇஇ பி.ஜி(SRMJEEE PG); இஞ்ஜினியரிங் பட்டமேற்படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான இஞ்ஜினியரிங் நுழைவுத்தேர்வை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் நடத்துகின்றது. இஞ்ஜினியரிங் பட்டமேற்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இளநிலை இஞ்ஜினியரிங் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு வரும் மே மாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. தேர்வு முடிவுகள் 2020 ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

ஜே.என்.யூ சிஇஇ எம்.டெக் 2020(JNU CEE M.Tech 2020); இஞ்ஜினியரிங் பட்டமேற்படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகம் JNU CEE M.Tech 2020 தேர்வை ஒவ்வொரு ஆண்டு நடத்துகின்றது. கடந்த ஆண்டைப் போலவே இஞ்ஜினியரிங் நுழைவுத்தேர்வுக்கான பதிவு மார்ச் மாதம் தொடங்கும் என்று தெரிகிறது. தேர்வு மே மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் தேர்வு கூட அனுமதி நுழைவு சீட்டினை jnu.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டி.எஸ். பி.ஜி.இசிஇடி 2020(TS PGECET 2020); தெலுங்கான மாநில உயர்கல்வி கவுன்சில் சார்பாக உஸ்மானிய பல்கலைக்கழகம் இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு இஞ்ஜினியரிங் படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்துகின்றது. கடந்த ஆண்டும் இந்த தேர்வு மே மாதம் நடத்தப்பட்டது. இந்த நுழைவுத்தேர்வுகான பதிவுகள் மார்ச் மாதம் தொடங்கும்.

Entrance Exams
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment