Advertisment

ஜேஇஇ மெயின்ஸ் தாண்டி மாணவர்கள் யோசிக்க வேண்டிய - 5 முக்கிய நுழைவுத் தேர்வுகள்

JEE Main 2020 க்காக வரும் அக்டோபர் 10 வரை பதிவு செய்யலாம். இருப்பினும், JEE மெயின் தவிர, மாணவர்கள் இந்த 5 பொறியியல் நுழைவுத் தேர்வையும் சற்று வாசிக்கலாம் .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
entrance-exams-other-than-jee-mains-upeseat-viteee-aeee-met-lpunest-be-best-campus-job-placement-entranece-exam

entrance-exams-other-than-jee-mains-upeseat-viteee-aeee-met-lpunest-be-best-campus-job-placement-entranece-exam

ஒவ்வொரு ஆண்டும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளால் பி.டெக் / பி.இ படிப்புகளில் சேர 20 க்கும் மேற்பட்ட பொறியியல் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜேஇஇ- (JEE Mains) என்பது ஒரு தேசிய அளவிலான தேர்வாகும்.  முக்கியமான  பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளால் இந்த தேர்வு மதிப்பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

Advertisment

JEE Main 2020 க்காக வரும் அக்டோபர் 10 வரை பதிவு செய்யலாம். இருப்பினும், JEE மெயின் தவிர, மாணவர்கள் இந்த 5 பொறியியல் நுழைவுத் தேர்வையும் சற்று வாசிக்கலாம் .

1. UPESEAT 2020 - 21 யுஜி பொறியியல் படிப்புகளுக்காக  பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வு பல்கலைக்கழகம் (UPES) UPESEAT  என்ற இந்த தேர்வை  நடத்துகிறது.  180 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேம்பஸ் வருவதால், பல்கலைக்கழகத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் நல்ல கம்பெனியில் தேர்ச்சிபெருகின்றனர் . UPESEAT க்கான பதிவு போர்டல் தற்போது திறக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் upes.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ .1,850 ஆக உள்ளது. 10 + 2 தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தோன்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. VITEEE 2020 - வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு (VITEEE) எப்போதும் பொறியியல் ஆர்வலர்களுக்கு முக்கிய தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விஐடி தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகமாகும். தற்போது, இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் என்ற சிறப்பும் பெற்றுள்ளது.

2019 பிப்ரவரி 29 வரை தேர்வுக்கான பதிவுமுறை நடைபெற்றது, 2020 ஏப்ரல் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில் தேர்வு  நடைபெற உள்ளது. தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம்                ரூ .1,150, விருப்பமுள்ளவர்கள் vit.ac.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு, மைக்ரோசாப்ட் இந்த கல்லூரியில் தான் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 39 லட்சம் அதிகபட்ச சம்பளத்தில் வேலைக்கு எடுத்தது, மேலும் 600 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்காக விஐடி கேம்பஸ்க்கு வந்திருந்தன.

3. AEEE 2020 :  அமிர்தா பல்கலைக்கழகம் அமிர்தா நுழைவுத் தேர்வை நடத்துகிறது.

பல்கலைக்கழகத்தின் பெங்களூரு, கோயம்புத்தூர், அமிர்தபுரி மற்றும் சென்னை வளாகங்களில் பி.டெக் படிப்புகளில் அனுமதி பெறும் பொறியியல் ஆர்வலர்கள் இந்த தேர்வை எழுதலாம். AEEE க்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது, விண்ணப்பிக்க கடைசி தேதி 2020 ஏப்ரல் 6 ஆகும். நுழைவுத் தேர்வு கணினி மூலமாகவும் மற்றும் பேனா/காகித முறையிலும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு வரும்  2020 ஏப்ரல் 23 முதல் 27 வரை நடைபெறவிருக்கிறது.

4. MET 2020 - முன்னதாக MU OET என அழைக்கப்பட்ட, மணிப்பால் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் பல நாட்களில் நடத்தப்படுகிறது.  MET 2020 க்கான பதிவு 2019 அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் 15, 2020 வரை விண்ணப்பிக்கலாம்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 + 2 தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் பதிவு செய்ய தகுதியானவர்கள்.

5. LPUNEST 2020 - லவ்லி நிபுணத்துவ பல்கலைக்கழகம் பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேருவதற்கான தேசிய நுழைவு மற்றும் உதவித்தொகை தேர்வை நடத்துகிறது. இந்த LPUNEST  நுழைவுத் தேர்வாகவும், மாணவர்களுக்கு உதவித்தொகை தேர்வாகவும் செயல்படுகிறது. செப்டம்பர் 2019 வெளியிடப்பட்ட LPUNEST க்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் கடைசி தேதி ஜனவரி 9, 2020 ஆகும்  . இருப்பினும், எல்.பி.யுவில் சேர்க்கை பல கட்டங்களில் செய்யப்படுகிறது . மீதமுள்ள கட்டங்களுக்கான தேதிகள் அந்தந்த நேரத்தில் வெளியிடப்படும்.

இவை தவிர, சத்தியபாமா மற்றும் பிஇஎஸ் (PES) போன்ற பல்கலைக்கழகங்களும் 2020 கல்வியாண்டிற்கான ஆட்சேர்கையை அறிவித்துள்ளன.

PESSAT விண்ணப்ப படிவம் அக்டோபர் 3, 2019 அன்று வெளியிடப்படும்,  சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு படிவங்களை அக்டோபர் 16, 2019 - ல் வெளியாகின்றன.

Iit Jee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment