Advertisment

FCI Recruitment 2019: எஃப்.சி.ஐ-யில் 4103 காலியிடங்கள்! உடனே அப்ளை செய்யுங்கள்

FCI Released Notification for JE, Steno, Typist and Assistant posts: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், பிப்ரவரி 23, 2019 முதல் மார்ச் 25, 2019 வரை அப்ளை செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FCI Recruitment 2019

 FCI Released Job Notification for 4103 Posts: ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனப்படும் FCI ஆள் சேர்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

Advertisment

ஜூனியர் இன்ஜினியர் (சிவில்/எலெக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்), அசிஸ்டெண்ட் கிரேட் 2 (இந்தி), ஸ்டெனோ கிரேட் 2, டைபிஸ்ட் (இந்தி), அசிஸ்டெண்ட் கிரேட் 3 (ஜெனரல், அக்கவுண்ட்ஸ், டெக்னிக்கல், டிப்போ) ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேற்கூறிய பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், பிப்ரவரி 23, 2019 முதல் மார்ச் 25, 2019 வரை அப்ளை செய்யலாம். மொத்தம் 4103 காலியிடங்களுக்கு fci.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வட கிழக்கு மண்டலங்களில் ஏதாவது ஒரு மண்டலத்திற்கு மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு நடைபெறும் நாளுக்கு 15 நாட்கள் முன்பிருந்தே விண்ணப்பதாரர்கள் தங்களது அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

காலியிட விபரங்கள்

ஜே.இ (சிவில்) - 114

ஜே.இ (எலெக்ட்ரிக்கல் மெக்கானிக்கல்) - 72

ஸ்டெனோ கிரேட் 2 - 76

அசிஸ்டெண்ட் கிரேட் 2 (இந்தி) - 44

டைபிஸ்ட் (இந்தி) - 38

அசிஸ்டெண்ட் கிரேட் 3 (ஜெனரல்) - 757

அசிஸ்டெண்ட் கிரேட் 3 (அக்கவுண்ட்ஸ்) - 509

அசிஸ்டெண்ட் கிரேட் 3 (டெக்னிக்கல்) - 720

அசிஸ்டெண்ட் கிரேட் 3 (டிப்போ) - 1773

தகுதி

ஜே.இ (சிவில்) - சிவில் இன்ஜினியரிங் துறையில் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன், 1 வருட அனுபவம் தேவை.

ஜே.இ (எலெக்ட்ரிக்கல் மெக்கானிக்கல்) - எலெக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோவில் தேர்ச்சி பெற்று 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்டெனோ கிரேட் 2 - டிகிரியுடன் DOEACC-ல் ’ஓ’ லெவல் தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 40 முதல் 80 வார்த்தைகள் ஸ்பீடு. அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 40 முதல் 80 வார்த்தைகள் வரை டைப் செய்யக் கூடியவர்கள்.

அசிஸ்டெண்ட் கிரேட் 2 (இந்தி) - இந்தியை முதல் பாடமாகக் கொண்டு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்திலிருந்து இந்தி மொழிப்பெயர்ப்பில் ஓராண்டு அனுபவம் தேவை.

டைபிஸ்ட் (இந்தி) - டிகிரியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் இந்தியில் டைப் செய்ய வேண்டும்.

அசிஸ்டெண்ட் கிரேட் 3 (ஜெனரல்) - டிகிரியுடன் கம்ப்யூட்டர் அனுபவம்

அசிஸ்டெண்ட் கிரேட் 3 (அக்கவுண்ட்ஸ்) - வணிக பாடத்தில் டிகிரி மற்றும் கம்ப்யூட்டர் அறிவு

அசிஸ்டெண்ட் கிரேட் 3 (டெக்னிக்கல்) - பி.எஸ்.சி அக்ரி, தாவரவியல், விலங்கியல், உயிரி தொழில்நுட்பம், உயிரி வேதியல், மைக்ரோபயாலஜி, உணவு அறிவியல். அல்லது பி.டெக்/பி.இ உணவு அறிவியல், உணவு அறிவியல் தொழில்நுட்பம், அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங், பயோ டெக்னாலஜி இவற்றில் ஏதேனும் ஒன்றை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் முடித்திருக்க வேண்டும்.

அசிஸ்டெண்ட் கிரேட் 3 (டிப்போ) - டிகிரியுடன் கம்ப்யூட்டர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

ஜே.இ - 28

ஸ்டெனோ - 25

ஏ.ஜி 3 - 27

ஏ.ஜி 2 - 28

டைபிஸ்ட் - 25

செலக்‌ஷன்

ஆன்லைன் தேர்வு, திறனாய்வு பிறகு ஆவணங்கள் சரிபார்த்தல்.

மேலும் தகவல்களுக்கு எஃப்.சி.ஐ-யின் fci.gov.in என்ற தளத்தை அணுகவும்.

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment