Advertisment

இந்திய உணவுக் கழகத்தில் மேனஜர் பணி - 1,40,000 வரை சம்பளம்

FCI Notification Manager: விண்ணப்பிக்கும் கடைசி நாள் - 27.10.2019 . தேர்வு தேதி இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FCI Recruitment 2019

இந்திய உணவுக் கழகத்தில் (எஃப்.சி.ஐ)  ஆட்சேர்ப்பின் கீழ்) மேலாளர்கள் (வகை II ) பதவிக்கான விண்ணப்ப செயல்முறை சனிக்கிழமை தொடங்கியுள்ளது.

Advertisment

தேர்தெடுக்கப்பட்ட தேர்வர்ககள் ஆறு மாதம் பயிற்சி பெறும் மேலாண்மையராக மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். பயற்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த உதவித்தொகையாக ரூ. 40000/- (நாற்பதாயிரம் ) மட்டுமே வழங்கப்படும். ஆறு மாதம் பயற்சியை வெற்றிகரமாக முடிக்கும் தேர்வர்கள் மட்டும் மேலாளர் ஐடிஏ ஊதிய அளவிற்கான 40000 - 140000 பணியில் அமர்த்தப்படுவார்கள்.

330 காலியிடங்கள் கொண்ட இந்த பணிக்கி  FCI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமே  விண்ணப்பங்கள் பெறப்படும் என்பது குறிப்பிடட்த் தக்கது . recruitmentfci.in என்ற வலைத் தளத்திற்கு சென்று கேட்டகிரி II- ஐ கிளிக் செய்யுங்கள். நார்த், ஈஸ்ட், வெஸ்ட்,சௌத், நார்த்-ஈஸ்ட் எந்த ஜோனில் விண்ணப்பிக்க விரும்கிறீர்கள் என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள். பின், கேட்டகப்பட்ட தகவல்களை கவனமாய் பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணத்தை செலுத்துங்கள்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களோடு  பட்டதாரி பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிக்க வேண்டும். மேனேஜர்(டெக்னிக்கல்)  பணிகளுக்கு - விவசாயப் படிப்பில் பிஎஸ்சி முட்டிதிருந்தல் வேண்டும்.

மற்ற விவரங்கள் :

விண்ணப்பிக்கும் செயல்முறை தொடங்கிய நாள் - நேற்று (28.09.2019 )

விண்ணப்பிக்கும் கடைசி நாள் - 27.10.2019

தேர்வு தேதி - இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை

விண்ணப்பதாரர்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இங்கே:

1) விண்ணப்பப் பணியைத் தொடங்குவதற்கு முன் உங்கள் புகைப்படம், கையொப்பம், இடது கட்டைவிரல் பதிவு மற்றும் உங்கள் கைப்பட எழுதிய சுயவாக்குமூலம்  ஆகியவற்றை ஸ்கேன் செய்து வைத்திருங்கள் .

2) கையொப்பம் பெரிய எழுத்துக்களில் இருக்கக்கூடாது மற்றும் கட்டைவிரல் பதிவை சரியான முறையில் ஸ்கேன் செய்திட  வேண்டும்.

3) எழுதப்பட்ட சுயவாகுமூலம்  வேட்பாளரின் கை எழுத்திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்க வேண்டும்.

4) பதிவு செய்யப்பட்ட உங்களது தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை ஆட்சேர்ப்பு செயல்முறை முடியும் வரை  கடைசிவரை  வைத்திருங்கள்.

5) இறுதி சமர்ப்பிப்பு பொத்தானைக் கிளிக் செய்த பிறகு எந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ளப்படாததால் ஆன்லைன் விண்ணப்பத்தில் விவரங்களை கவனமாக நிரப்பவும்.

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment