10 மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்… – அழைக்கிறது தமிழக வனத்துறை

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன.

By: Published: July 5, 2019, 7:24:55 PM

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வனத்துறையில் தற்போது காலியாக உள்ள 564 வனக்காவலர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் பட்டதாரி விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : வனக்காவலர்

மொத்த பணியிடங்கள் : 564

கல்வித்தகுதி – 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள்

வயதுவரம்பு : 2019 ஜூலை 1ம் தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்

சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனைகள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் : ரூ.150 மற்றும் சேவைக்கட்டணம்

விண்ணப்பிக்கும் முறை : https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Tenttive%20Schedule.pdf அதிகாரப்பூர்வ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறு விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி : ஆகஸ்ட் முதல் வாரம் ( இறுதி செய்யப்பட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்)

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Forest watcher recruitment in forest department

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X