Advertisment

அரசுப் பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை; மாணவர்கள் அவதி

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை; ஒரு மாதம் கடந்தவிட்ட நிலையில், விரைந்து வழங்க மாணவர்கள் எதிர்ப்பார்ப்பு

author-image
WebDesk
New Update
அரசுப் பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை; மாணவர்கள் அவதி

Government schools waiting for textbooks supply: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால் மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில், பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நோட்டு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு; ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு பல்வேறு கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. இந்தநிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள், சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வருபவர்கள். அவர்களுக்கு அரசு வழங்கும் நோட்டுகள் மற்றும் சீருடைகளைத் தான் நம்பியுள்ளனர். ஆனால், இதுவரை வழங்கப்படாத நிலையில், அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர் என கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் ஒரு சில பள்ளிகளில் இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த மாணவர்கள், முன்னாள் மாணவர்களிடம் பழைய பாடப்புத்தகங்களை பெற்று சமாளித்து வருவதாக கூறப்படுகிறது. ஜூலை மாத தொடக்கத்தில் புத்தகங்கள் வழங்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை ஒரு சில பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

சில பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவர்களுக்கு நோட்டுகளை வாங்கி வழங்கி வருகின்றனர். இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் விரைவில் அரசு நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரம், நோட்டுப் புத்தகங்கள் இன்னும் விநியோகிக்கப்படவில்லை. அவற்றை நாங்கள் விரைவில் எதிர்பார்த்து வருகிறோம். ஆனால், பாடப்புத்தகங்கள் ஏற்கனவே பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்குவதை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

School
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment