Advertisment

இஸ்ரோ யுவிகா இளம் விஞ்ஞானி : விண்ணப்பம் செய்வது எப்படி?

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நடத்தும் யுவிகா இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி ?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இஸ்ரோ யுவிகா இளம் விஞ்ஞானி : விண்ணப்பம் செய்வது எப்படி?

இஸ்ரோ இளம் விஞ்ஞானி:  இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நடத்தும் யுவிகா இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து விட்டீர்களா?

Advertisment

இஸ்ரோ இளம் விஞ்ஞானி திட்டம்:   

கோடை விடுமுறை நாட்களில் (மே 11-22, 2020) இந்த யுவிகா இளம் விஞ்ஞானி திட்டம் நடத்தப்படுகிறது. விஞ்ஞானிகளின் அனுபவ பகிர்வு, விண்வெளி நிபுணர்களுடனான கலந்துரையாடலுக்கான பிரத்யேக அமர்வுகள், நடைமுறை மற்றும் கருத்து அமர்வுகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

இதற்கான, விண்ணப்ப செயல்முறை வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மாநில பாடத்திட்டங்களை  உள்ளடக்கிய யுவிகா திட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாநில / யூனியன் பிரதேசத்திலிருந்து தலா 3 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனியாக 5 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இளம் விஞ்ஞானி திட்டம் : வருங்கால அப்துல் கலாம்களை அழைக்கும் இஸ்ரோ

யார் விண்ணபிக்கலாம்:  

8 ஆம் வகுப்பு முடித்து, தற்போது 9 ஆம் வகுப்பில் (2019-20 கல்வியாண்டில்) படிப்பவர்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதி பெறுகிறார்கள்.

எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்:  

தேர்வு 8 ஆம் வகுப்பு கல்வி செயல்திறன் அடிப்படையிலும், கூடுதல் சிறப்பு தகுதிகள் அடிப்படையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதலாக 15% மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

 

publive-image

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நடத்தும் யுவிகா இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி: 

ஸ்டேப்  1: isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

ஸ்டேப் 2: முகப்புப்பக்கத்தில், ‘யுவிகா இளம் விஞ்ஞானி’ என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் 3: 'ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன்' என்பதை கிளிக் செய்ய வேண்டும்

ஸ்டேப்  4: கேட்கப்படும் விவரங்களை நிரப்பவும் (உங்கள் பெயர், இ-மெயில் ஐ.டி) பின், உங்கள் இ-மெயிலுக்கு வரும் ஒன்-டைம் பாஸ்வேர்ட்டை செலுத்தி உள்நுழைய வேண்டும்.

ஸ்டேப் 5: உள்நுழைந்த பிறகு, கேட்கப்படும் இதர விவரங்களை நிரப்பி, உங்கள் புகைப்படங்களை பதிவேற்ற வேண்டும்.

மார்ச் 30 ஆம் தேதி வெளியிடப்படும் :  

தற்காலிகமாக தேர்ந்ட்தேடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் வரும் மார்ச் மாதம் இரண்டாம் தேதி அன்று அறிவிக்கப்படும். தற்காலிகமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை மார்ச் 23 அல்லது அதற்கு முன்னர் மாணவர்கள் பதிவேற்ற வேண்டும்.

தொடர்புடைய சான்றிதழ்களை சரிபார்த்த பிறகு இறுதி தேர்வு பட்டியல் மார்ச் 30 அன்று வெளியிடப்படும், ” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment