Advertisment

TNPSC Group 4 Hall Ticket 2019: டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த உங்களது அடுத்த எதிர்பார்ப்பிற்கு விடை இங்கே....

How to download TNPSC Group 4 Admit Card 2019 - அதிகாரப்பூர்வ தளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்த பிறகு, உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மெயில் ஐடிக்கு Notification வரும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc group 4 result scanned documents upload online through E-seva ccentre

tnpsc group 4 result scanned documents upload online through E-seva ccentre

TNPSC Group 4 Exam Admit Card Download : காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ) இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டெனோகிராபர், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு, செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால நேரம் முடிந்திருக்கும் நிலையில், அனைவரின் அடுத்த எதிர்பார்ப்பும் எப்போது ஹால் டிக்கெட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதே. செப்டம்பரில் நடக்கவுள்ள இத்தேர்வுக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Group 4 Hall Ticket 2019

குரூப் 4 தேர்வுக்கான அட்மிட் கார்டு, அதாவது ஹால் டிக்கெட்டை, டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ தளம் மூலம் ரெஜிஸ்டர் எண் மற்றும் பாஸ்வேர்டு இருந்தால் தான் டவுன்லோட் செய்ய முடியும். லாக் இன் செய்வதற்கான அனுமதி இல்லாமல், உங்களால் டவுன்லோட் செய்ய முடியாது. அதிகாரப்பூர்வ தளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்த பிறகு, உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மெயில் ஐடிக்கு Notification வரும். அதன்பிறகு, நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்வது எப்படி?

டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ தளமான www.tnpsc.gov.in செல்லவும்.

அங்கு, முகப்பு பக்கத்தில் இருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அட்மிட் கார்டு என்பதை க்ளிக் செய்யவும்

பிறகு, விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டு மூலமாக லாக் இன் செய்யவும்

இறுதியில், Submit கொடுத்து, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அட்மிட் கார்டை டவுன்லோட் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

ஹால் டிக்கெட் வெளியீடு குறித்த அறிவிப்பை, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment