Advertisment

பதவி காலம் முடிய போகுது... ஆனால் டிகிரி சான்றிதழ் மிஸ்ஸிங்! டபாய்க்கும் ஐஐஎம் இயக்குனர்

IIM Director at end of term, his undergrad degree still not with Centre: ஐஐஎம் இயக்குனரின் பதவிக்காலம் 5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இளங்கலை படிப்பு குறித்த சர்ச்சை; தகுதியற்ற நியமனம் என்ற குற்றச்சாட்டை மறுக்கும் மத்திய அரசு

author-image
WebDesk
New Update
பதவி காலம் முடிய போகுது... ஆனால் டிகிரி சான்றிதழ் மிஸ்ஸிங்! டபாய்க்கும் ஐஐஎம் இயக்குனர்

இந்திய மேலாண்மைக் கழகம் ரோஹ்தக்-இன் இயக்குனர் தீரஜ் சர்மாவின் ஐந்தாண்டு பதவி காலம் முடிவடைய இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மத்திய அரசு இன்னும் தீரஜ் சர்மாவின் இளங்கலை பட்டப்படிப்பைப் பெற முயற்சிக்கிறது.

Advertisment

மத்திய கல்வி அமைச்சகம் இந்த ஆண்டு ஐஐஎம் ரோஹ்தக் இயக்குநர் தீரஜ் சர்மாவிற்கு, அவருடைய கல்விச் சான்றிதழ்களின் சரிபார்க்கப்பட்ட நகல்களைக் கேட்டு இரண்டு முறை கடிதம் எழுதியது. ஆனால் இயக்குநர் தீரஜ் சர்மா பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், தகுதியற்ற நியமனம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் அவரது நியமனத்தை மத்திய அரசு பாதுகாக்கிறது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் முதல் கடிதம் பிப்ரவரி 18 அன்று அனுப்பப்பட்டது. தீரஜ் சர்மாவிடம் இருந்து பதில் வராததால் நினைவூட்டல் கடிதம் ஜூன் 28 அன்று அனுப்பப்பட்டது.

தீரஜ் சர்மாவின் நியமனத்தை எதிர்த்து பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர், வேறு சில காரணங்களுடன், இயக்குனர் தனது கல்வித் தகுதியை தவறாக சித்தரித்துள்ளார் என்றும், அவர் அந்தப் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்றும் இயக்குனர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

முதல் வகுப்பு இளங்கலை பட்டம் இயக்குனராக நியமிக்கப்படுவதற்கு முன்நிபந்தனை. ஆனால், கல்வி அமைச்சகத்திடம் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் இருந்து தீரஜ் ஷர்மாவின் எம்பிஏ பட்டமும், அமெரிக்காவின் லூசியானா டெக் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட (எல்.டி.யு) பிஎச்டி பட்டமும் உள்ளது, ஆனால் அவரது இளங்கலை பட்டப்படிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ பதிவு இல்லை. இந்த ஆவணம் இல்லாமல் பிப்ரவரி 2017 இல் தீரஜ் ஷர்மாவின் நியமனம் எப்படி அங்கீகரிக்கப்பட்டது என்பது தெளிவாக இல்லை.

கல்வி அமைச்சகத்தின் மூத்த வழக்கறிஞர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் அரசாங்கம் சார்பில் ஆஜராகி வருகிறார். இயக்குனரின் கல்வி தகுதி குறித்த மனுதாரர் சவாலை தீர்க்க, மத்திய அரசு தீரஜ் ஷர்மாவின் இளங்கலை பட்டத்தை பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இறுதியாக இந்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலத்தில், இயக்குனரின் நியமனத்தை அரசு பாதுகாத்தது மற்றும் மனுதாரர்களுக்கு வழக்கு தொடுக்க எந்த இடமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தியது. இயக்குநர் பணிக்கான 60 விண்ணப்பதாரர்களில் யாரும் தீரஜ் சர்மாவின் நியமனத்தை சவால் செய்யவில்லை என்று அரசு கூறியது.

கல்வி அமைச்சகம் சர்மாவின் MBA மற்றும் PhD பட்டங்களின் நகல்களை தாக்கல் செய்தது ஆனால் அவரது இளங்கலை பட்டத்தின் நகலை தாக்கல் செய்யவில்லை. அதைத் தொடர்ந்து, கல்வி அமைச்சகம் தீரஜ் சர்மாவுக்கு இரண்டு நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியது.

இந்த காணாமல் போன பட்டம் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சர்மாவிடம் கேட்டபோது, ​​சர்மா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அவரின் தகுதியை சரிபார்க்க தீரஜ் அமைச்சகத்திற்கு "தேவையானதை" வழங்கியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், தீரஜ் சர்மா டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.

தீரஜ் சர்மாவின் இளங்கலை பட்டம் இல்லாமல் சர்மாவின் நியமனம் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டது மற்றும் சர்மாவிடம் இருந்து பதில் இல்லாத நிலையில், கல்வி அமைச்சகம் என்ன செய்தது என்று கேட்கும் மின்னஞ்சலுக்கு கல்வி அமைச்சகம் பதிலளிக்கவில்லை.

பிஎச்டி படிப்பில் சேர விரும்பும் போது தீரஜ் ஷர்மா தனது இளங்கலை பட்டத்திற்கான சான்றை சமர்ப்பித்தாரா என்று கேட்டதற்கு, எல்.டி.யு சட்ட ஆலோசகர் ஜஸ்டின் காவலீர் "விண்ணப்பத்துடன் தேவைப்படுவதால்" சமர்ப்பித்ததாக கூறினார்.

பதிவுகளை தக்கவைப்பதில் உள்ள சிக்கலால், அவரின் நகல்கள் இல்லை. நாங்கள் ஒப்பதல அளிக்கவில்லை என்றால், அவர் பட்டம் பெற்றிருக்க முடியாது, ”என்று காவலீர் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு ஒரு மின்னஞ்சலில் பதில் எழுதினார்.

தீரஜ் சர்மா 2006 இல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தீரஜ் சர்மா பிப்ரவரி 10, 2017 அன்று ஐஐஎம்-ரோஹ்தக் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் அவர் ஐஐஎம், அகமதாபாத்தில் பேராசிரியராக இருந்தார். நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, ஷர்மாவின் "முதன்மை ஆராய்ச்சி ஆர்வங்கள் வணிக களத்தில் 'உறவுகள்' ஆகும்."

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Central Government Iim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment