Advertisment

பொறியியல் மாணவர்களுக்கான GATE தேர்வு; 2022ஆம் ஆண்டிற்கான தேர்வை நடத்துகிறது ஐ.ஐ.டி கராக்பூர்

IIT Kharagpur to conduct GATE 2022: கேட் 2021 தேர்வுக்கு, மொத்தம் 8,82,684 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர், இது கடந்த ஆண்டு 2020ஐ ஒப்பிடுகையில், 8.59 லட்சம் விண்ணப்பங்களிலிருந்து சற்று அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
பொறியியல் மாணவர்களுக்கான GATE தேர்வு; 2022ஆம் ஆண்டிற்கான தேர்வை நடத்துகிறது ஐ.ஐ.டி கராக்பூர்

பட்டதாரி ஆப்டிட்யூட் டெஸ்ட் (GATE) 2022 ஆம் ஆண்டு தேர்வுக்கான ஏற்பாடுகளை கராக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) செய்கிறது. கேட் 2021 ஐ.ஐ.டி பம்பாயால் ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் இந்த ஆண்டு இந்த பொறுப்பு ஐ.ஐ.டி-கராக்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisment

ஐ.ஐ.டி மும்பையின் இயக்குனர் சுபாசிஸ் சவுத்ரி, என்.சி.பி-கேட் 2022 இன் தலைமையை ஐ.ஐ.டி கராக்பூரின் இயக்குனர் வீரேந்திர சிங் திவாரிக்கு வழங்கினார்.

கேட் 2021 தேர்வுக்கு, மொத்தம் 8,82,684 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர், இது கடந்த ஆண்டு 2020ஐ ஒப்பிடுகையில், 8.59 லட்சம் விண்ணப்பங்களிலிருந்து சற்று அதிகரித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மனிதநேய பாடங்களுக்கு மொத்தம் 14,196 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இது மொத்தம் உள்ள 27 பாடப்பிரிவுகளில் ஒன்பது பாடங்களுக்கு வந்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கையை விட அதிகம். 2021 ஆம் ஆண்டில் குறைவான விண்ணப்பததாரர்களால் தேர்வுசெய்யப்பட்ட பாடப்பிரிவு புள்ளியியல் ஆகும். அதே நேரத்தில் அதிக விண்ணப்பதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப்பிரிவாக இயந்திர பொறியியல் உள்ளது.

மனிதநேய பாடப்பிரிவுகளில், விண்ணப்பத்தவர்களில் பெண்கள் அதிகம். 8,634 பெண் விண்ணப்பதாரர்கள் மனிதநேய பாடத்திற்கு விண்ணப்பித்துள்ளனர் . ஒட்டுமொத்தமாக, பெண் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. கேட் 2021 க்கு மொத்தம் 2,88,379 பெண் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இது கடந்த ஆண்டை விட சுமார் 10,000 அதிகமாகும்.

கடந்த ஆண்டு, ஐ.ஐ.டி-பம்பாய் மூன்றாம் ஆண்டு மாணவர்களும் தேர்வில் தேர்ச்சி பெற தகுதிகளை தளர்த்தியிருந்தது. முன்னதாக, தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள், பட்டதாரிகள் அல்லது நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே.

“தொற்றுநோய் காரணமாக, பல பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெற முடியவில்லை, மற்றவற்றில் முடிவுகள் தாமதமாகியுள்ளன. இறுதித் தேர்வு முடிவுகள் இன்னும் வெளிவராததால், இப்போது நான்காம் ஆண்டில் இருக்கிறார்களா அல்லது மூன்றாம் ஆண்டில் இருக்கிறார்களா என்று உறுதியாக தெரியாத 2020 ஆம் ஆண்டு குழுவில் இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தகுதிக்கான அளவுகோல்களை தளர்த்துவதன் மூலம், அவர்களின் கவலைகளை குறைக்க முயற்சித்தோம். ” என்று கேட் 2021 இன் அமைப்பின் தலைவர் தீபங்கர் சவுத்ரி indianexpress.com இடம், கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Entrance Exams
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment