இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (ஐ.ஐ.டி சென்னை) அதன் முன்னாள் மாணவர்களால் இதுவரை இல்லாத மிகப் பெரிய மரபுப் பரிசாக மின்சாரப் பேருந்துகளின் தொகுப்பைப் பெற உள்ளது. 1981 ஆம் ஆண்டின் வகுப்பினரால் மின்சார பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்படுகின்றன. இன்று 81 பேட்ச் மாணவர்களின் 40 வது மறு சந்திப்பு (ரீயூனியன்) ஆகும்.
81 ஆம் ஆண்டில் பல்வேறு பி.டெக், எம்.டெக் மற்றும் பி.எச்.டி படிப்புகளில் படித்த சுமார் 600 மாணவர்கள் உள்ளனர். இந்த பேட்ச் மாணவர்கள் இப்போது உலகம் முழுவதும் பரவலாக பரவியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் பள்ளிகளுக்கு தாமதமாக கிடைக்கும் கேள்வித்தாள்கள்
81 பேட்ச் மாணவர்கள் 1976 ஆம் ஆண்டு ஐ.ஐ.டி மெட்ராஸில் சேர்ந்தனர், ஏனெனில் அப்போது ஐந்தாண்டு படிப்பாக இருந்தது. ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர், பேராசிரியர் வி காமகோடி கூறுகையில், இது ஒரு சிறப்புப் பரிசு என்றும், தற்போதுள்ள டீசல் பேருந்துகள் மற்றும் கோல்ஃப் கார்ட்களை மாற்றி, 2050-ஆம் ஆண்டுக்குள் ஜீரோ கார்பன் வளாகம் என்ற இலக்கை அடைய நிறுவனத்திற்கு உதவும் என்றும் கூறினார்.
மூன்று நாள் ரீயூனியனில், அவர்கள் பட்டம் பெற்றதில் இருந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களைப் பற்றி அறிந்துகொள்ள, ஐ.ஐ.டி வளாகத்தை சுற்றி பார்த்தனர். பேராசிரியர் காமகோடி மற்றும் பிற ஆசிரிய உறுப்பினர்களுடன் 2006 இல் 25 வது ரீயூனியன் போது பேட்ச் தொடங்கிய திட்டங்களையும் அவர்கள் விவாதிப்பார்கள்.
ஐ.ஐ.டி மெட்ராஸ் 1959 இல் இந்திய அரசாங்கத்தால் ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக’ நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் 16 கல்வித் துறைகள் மற்றும் பல மேம்பட்ட இடைநிலை ஆராய்ச்சி கல்வி மையங்கள் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil