இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) மெட்ராஸின் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன், 'வித்யா சக்தி' உடன் கூட்டு சேர்ந்துள்ளது, வித்யா சக்தி என்பது உத்திரபிரதேசத்தின் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) மூலம் கல்வி கற்பதற்கான OpenMentor இன் முயற்சியாகும். OpenMentor என்பது Softsmith Infotech Private Limited இன் CSR முயற்சியாகும்.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக விரிவடைந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே உள்ள 'அறிவு இடைவெளி'யைச் சமாளிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. வகுப்புகள் மொழிகளின் அடிப்படைகள் மற்றும் கணிதம் மற்றும் அறிவியலில் கவனம் செலுத்துகின்றன.
இதையும் படியுங்கள்: தலித் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் புதுச்சேரி தனியார் பள்ளிகள்; கல்வி கட்டணக் குழுவில் வி.சி.க புகார்
வாரணாசி மாவட்டத்தின் 100 கிராமங்களில் ஏற்கனவே 6 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி மொழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பல்வேறு தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் மாணவர் தக்கவைப்பு நிலைகள் அதிகரித்துள்ளன. STEM ஆசிரியர்கள் VR ஹெட்செட்களை வகுப்புகளுக்கு எடுத்துச் சென்று பாடங்களை 'நடத்துவார்கள்', மேலும் சென்சார்கள் மூலம் சுற்றுச்சூழலை (பொருள்) 'உணர' மாணவர்களுக்கு உதவுவார்கள். அறிவியல் மற்றும் கணிதத்தில் உள்ள கருத்துகளுக்கு, குறுகிய 3D வீடியோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனுபவத்தை மாணவர்களுக்கு மறக்க முடியாததாக மாற்றும் வகையில், காட்சிப்படுத்தல் அமர்வுகள் கேள்விகள் மற்றும் பதில் அமர்வுகள் மூலம் கலந்துரையாடும் வகையில் செய்யப்படுகின்றன. கேள்வி மற்றும் பதில்களின் போது பதில்களை 'சொல்வதன்' மூலம் மாணவர்கள் அதிக அக்கறை, தகவல் தொடர்பு மற்றும் பங்கேற்பு ஆகியவற்றை விரைவாக வளர்த்துக் கொள்வார்கள்.
STEM ஆசிரியர் ஒவ்வொரு அமர்வுக்கும் மூன்று முதல் நான்கு VR சாதனங்களை எடுத்துச் செல்வார், அவர்கள் காலையில் ஒரு பள்ளிக்கும் மதியம் ஒரு பள்ளிக்கும் செல்வார்கள். இந்த கருத்து மாணவர்களுக்கு சுருக்கமாக விளக்கப்படும், அதன் பிறகு அவர்களுக்கு சிறிய தொகுதிகளாக VR வீடியோக்கள் காண்பிக்கப்படும்.
ஐ.ஐ.டி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை என்பது இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையமாகும். இது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்பட்ட லாப நோக்கற்ற நிறுவனமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil