Advertisment

கேம்பஸ் இண்டர்வியூ-வில் அசத்தும் ஐ.ஐ.டி மெட்ராஸ்; கோடிகளில் சம்பளம் பெறும் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள்

ஐ.ஐ.டி-மெட்ராஸ் இந்தியாவின் சிறந்த மற்றும் பழமையான பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகும். கடந்த ஐந்தாண்டுகளில் கணினி அறிவியல் பொறியியலுக்கான அவர்களின் சராசரி மற்றும் அதிக வேலை வாய்ப்புச் சலுகைகள் பற்றிய விவரம் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேம்பஸ் இண்டர்வியூ-வில் அசத்தும் ஐ.ஐ.டி மெட்ராஸ்; கோடிகளில் சம்பளம் பெறும் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள்

2022-23 கல்வியாண்டிற்கான இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி) மெட்ராஸின் வேலைவாய்ப்புகளில், 445 மாணவர்கள் இந்த ஆண்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பேக்கேஜ்களைப் பெற்ற 25 மாணவர்களும் இதில் அடங்குவர். கடந்த சில ஆண்டுகளில், கணினி அறிவியல் பொறியியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) மாணவர்கள் மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது முன்கூட்டியே வேலைவாய்ப்பைப் பெற்றவர்களில் உள்ளனர்.

Advertisment

முந்தைய ஆண்டுகளின் ஐ.ஐ.டி மெட்ராஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் வேலை வாய்ப்புத் தரவைப் பாருங்கள்.

இதையும் படியுங்கள்: பி.ஜி நீட்: இன்டர்ன்ஷிப் கட்-ஆஃப் தேதி… 50% குறைவானவர்களே தகுதி.. மருத்துவர்கள் விமர்சனம்

வேலை வாய்ப்பு தொகுப்புகள்

இந்த ஆண்டு, ஐ.ஐ.டி மெட்ராஸ் மாணவர்கள் 2022-23 கல்வியாண்டிற்கான வேலை வாய்ப்புகளின் முதல் நாள் (டிசம்பர் 1, 2022) அமர்வு 1.1 முடிவில் மொத்தம் 445 பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். இந்த எண்ணிக்கை, முன் வேலை வாய்ப்பு சலுகைகளை (PPOs) உள்ளடக்கியது, இது அமர்வு 1.1 இன் முடிவில் ஐ.ஐ.டி மெட்ராஸின் வேலை வாய்ப்பு வரலாற்றில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டு 407 என்ற எண்ணிக்கையை விட இந்த ஆண்டு 10 சதவீதம் அதிகமாகும்.

அமர்வு 1.1 இன் முடிவில் ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமான ஊதிய தொகுப்புகளுடன் மொத்தம் 25 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. நடந்துகொண்டிருக்கும் IT பணிநீக்கங்கள் இருந்தபோதிலும், அமர்வு 1.1 இன் முடிவில் நான்கு நிறுவனங்களிடமிருந்து (Mckinsey & Co., EY, Amazon, Accenture) மொத்தம் 15 சர்வதேச வேலைவாய்ப்பு பெறப்பட்டன. ஐ.ஐ.டி.,யில் வேலைவாய்ப்பு அமர்வுகள் மே 2023 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 முதல் 2022 வரை, சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை பல சரிவுகளையும் அதிகரிப்பையும் கண்டுள்ளது. indianexpress.com பகுப்பாய்வு செய்த தரவுகளின்படி, 2018-19 ஆம் ஆண்டில் ஐ.ஐ.டி மெட்ராஸின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையின் வேலைவாய்ப்புகளில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 108 இலிருந்து 125 ஆக உயர்ந்துள்ளது, இருப்பினும், சலுகைகளின் எண்ணிக்கை 93 இலிருந்து 90 ஆக குறைந்துள்ளது. சராசரி சம்பளம், மேலும், ஆண்டுக்கு 39.02 லட்சத்தில் இருந்து 29.28 லட்சமாக குறைந்துள்ளது.

இதேபோல், 2019-20ல் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வேலை வாய்ப்பு சலுகைகள் 116 மற்றும் 91 ஆக அதிகரித்த நிலையில், 2020-21 வேலை வாய்ப்பு பருவத்தில் வேலைவாய்ப்பு சலுகைகளின் எண்ணிக்கை மீண்டும் 84 ஆக குறைந்துள்ளது. சராசரி சம்பளம் 2019-20ல் ஆண்டுக்கு 30.1 லட்சமாகவும், பின்னர் 2020-21 அமர்வில் 38.02 ஆகவும் உயர்ந்துள்ளது.

20211-22 ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்தது மற்றும் வேலைவாய்ப்பு சலுகைகளின் எண்ணிக்கையும் 93 ஆக உயர்ந்துள்ளது, நாடு முழுவதும் ஐ.டி பணிநீக்கங்கள் இருந்தபோதிலும், சராசரி சம்பளம் ஆண்டுக்கு 41.72 லட்சமாக உயர்ந்தது.

ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகள்

2022 வேலை வாய்ப்பு இயக்கம் 480க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 1,491 சலுகைகளுடன் முடிந்தது. யு.ஜி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2.14 கோடியும், எம்.டெக் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.46.08 லட்சமும் வழங்கப்படும்.

சிறந்த ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் - துறை வாரியான பிரிவு

பகுப்பாய்வு

McKinsey & Co., Accenture, CISCO, Tiger Analytics, Chainalytics, OSG Analytics, Dell

நிதி

EY, ICICI, Protiviti, TVS கிரெடிட்

பொது மேலாண்மை

Amazon, IBM, Digital Insurance, GAVS, Zycus

சந்தைப்படுத்தல்

McKinsey & Co., Get My Parking, Delloite, Zycus, Cornext, 2IIM, Mahindra & Mahindra

செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி

மெக்கின்சி & கோ.

ஐ.ஐ.டி மெட்ராஸ்

1959 இல் நிறுவப்பட்ட ஐ.ஐ.டி மெட்ராஸ், மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (என்.ஐ.ஆர்.எஃப்) நாட்டின் சிறந்த பொறியியல் கல்லூரியாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களின் பிரிவிலும், ஐ.ஐ.டி மெட்ராஸ் முதலிடத்தைப் பிடித்தது. ஐ.ஐ.டி மெட்ராஸ் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இந்தியாவின் பொறியியல் கல்வி நிறுவனங்களில் முதலிடம் வகிக்கிறது.

ஐ.ஐ.டி மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்வி, அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு மற்றும் தொழில்துறை ஆலோசனை ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் அறியப்படுகிறது. மிக சமீபத்தில், ஐ.ஐ.டி மெட்ராஸுக்கு இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் என்ற பட்டம் வழங்கப்பட்டது. கூடுதலாக, 38.6 மதிப்பெண்களுடன், ஐ.ஐ.டி மெட்ராஸ் QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2023 இல் 250 வது இடத்தைப் பிடித்தது.

இந்த ஆண்டு, ஐ.ஐ.டி மெட்ராஸின் பி.எஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் 'சிறந்த ஆன்லைன் திட்டம்' பிரிவில் வெள்ளிப் பரிசையும், Wharton-QS Reimagine கல்வி விருதுகளின் 'வாழ்நாள் கற்றல் வகையில் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எஸ்.சி.,யின் கூட்டு முயற்சியான என்.பி.டி.இ.எல் (தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட கற்றல் பற்றிய தேசிய திட்டம்) தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளது.

கூடுதல் தகவல் : நீல்லோஹித் ரே

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit Madras Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment