Advertisment

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய அஞ்சல்துறை வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அஞ்சல் துறை வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

India Post invites application for Staff Car Driver posts: இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாட்டு கிளைகளில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய அஞ்சல் துறையின், தமிழ்நாடு வட்டம், கோயம்புத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கார் டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.03.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

கார் ஓட்டுனர் (Staff Car Driver)

காலியிடங்களின் எண்ணிக்கை : 17

காலியிட விவரம்: கோயம்புத்தூர் – 11, ஈரோடு -2, நீலகிரி -1, சேலம் மேற்கு – 2, திருப்பூர் - 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 18,000 – 62,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவர குறிப்பு அடங்கிய விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Manager, Mail Motor Service, Good Shed Road, Coimbatore – 641 001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.03.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf  என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs Post Office
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment