Advertisment

திறன் அறிக்கை வெளியீடு - பி.டெக்,பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவதாக தகவல்

3-12 மாதங்கள் அப்ரென்டிஷிப் பயிற்சி பெறுவது வேலைவாய்ப்பை அதிக அளவில் மேம்படுத்தும் என்று 94 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் நம்புகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India Skills Report 2019 jobs in chennai , jobs in tamilnadu , jobs for engineerrs

India Skills Report 2019 jobs in chennai , jobs in tamilnadu , jobs for engineerrs

இந்தியாவில் 46 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற  தயாராக உள்ளனர் என்ற  இந்தியா திறன் 2019-20 என்ற அறிக்கை கூறியுள்ளது. 2014ம் ஆண்டு இதன் சதவீதம் 33-க இருந்தது. இந்த 46 சதவீத மாணவர்களில் எம்பிஏ படித்த மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற அதிக வாய்ப்புடையவர்களாக  இருக்கின்றனர். அதவாது, வேலைவாய்ப்பை பெரும் மொத்த சதவீதத்தில் 56சதவீதம் எம்பிஏ மாணவர்களாய் உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு எம்பிஏ சதவீதம் 40-க இருந்தது.  இது மட்டுமின்றி பி.பார்மா, பாலிடெக்னிக், பி.காம்,  பி.ஏ போன்ற படிப்புகள் வேலைவாய்ப்பில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

Advertisment

எவ்வாறாயினும், பி.டெக்,  பொறியியல், எம்.சி.ஏ பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் கணினி தொடர்பான படிப்புகளில் சேர்ந்தவர்களுக்கு  வேலையை பெரும் வாய்ப்பு இந்த ஆண்டு குறைந்திருக்கிறது . திறமையான மாணவர்களை உருவாக்குவது கடந்த ஆறு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

அதிக வேலைவாய்ப்பை பெரும் மாணவர்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் உள்ளன.

 

மும்பை தொடர்ந்து ஐதராபாத் அதிக வேலைவாய்ப்பு பெறும் நகரங்களாக உள்ளது.  பெங்களூரு, புது தில்லி, புனே, லக்னோ மற்றும் சென்னை ஆகியவை கடந்த ஆறு ஆண்டுகளாக  முதல் பட்டியலில் 10 இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பதாக  இந்த அறிக்கை கூறுகிறது.

தரவரிசையில் சரிவைப் பதிவு செய்த மாநிலங்கள் வரிசையில்  மேற்கு வங்கமும்,  ஹரியானா  இடம் பெற்றுள்ளன.  கடந்த ஆண்டில் இரண்டாவது இடத்தில் இருந்த மேற்கு வங்கம்  முதல் 10 இடங்களில் கூட இடம் பெற முடியவில்லை.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான டேட்டாக்களை  ஆழமாகப் பார்த்தால், மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு சதவீதம் உயர்ந்த போக்கை காட்டுகிறது. 2017 ல் 38 சதவீதத்திலிருந்த இந்த எண்ணிக்கை 2018-ல் 46 சதவீதமும், இந்த ஆண்டில் 47 சதவீதமாக பதிவாகியுள்ளன.

ஹைதராபாத், காஜியாபாத் விசாகப்பட்டினம் ஆகியவை அதிக வேலைவாய்ப்பு பெறும் திறமையான பெண்களைக் கொண்ட  கொண்ட முதல் மூன்று நகரங்களாக உள்ளன. 3-12 மாதங்கள் அப்ரென்டிஷிப் பயிற்சி பெறுவது வேலைவாய்ப்பை அதிக அளவில் மேம்படுத்தும் என்று 94 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் நம்புகின்றனர்.

திறமை மதிப்பீட்டு நிறுவனமான வீபாக்ஸ், பீப்பிள்ஸ்ட்ராங் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) யுஎன்டிபி, ஏஐசிடிஇ மற்றும் ஏஐயு ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா திறன் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்காக  நாடு முழுவதும் இருக்கும் 3500 கல்வி நிறுவனங்களில் உள்ள மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment