Advertisment

IREL Recruitment: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ஓர் அற்புதமான வாய்ப்பு!

பொதுப்பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவருக்கு கட்டணமில்லை.  

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NPCIL Recruitment 2019

NPCIL Recruitment 2019

IREL Recruitment: இந்தியன் ரேர் எர்த் லிமிடெட்டின், அட்டோமிக் எனர்ஜி துறையில், மேலாண்மை பயிற்சியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

இதற்கான முன்பதிவு மார்ச் 23-ல் துவங்கி, ஏப்ரல் 12 வரை செய்துக் கொள்ளலாம். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல், மினரல் ஆகியப் பிரிவுகளில் மொத்தம் 20 காலியிடங்கள் உள்ளன.

எழுத்துத் தேர்வு மற்றும் தனி நேர்க்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூர், கெளஹாத்தி, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இத்தேர்வு வரும் ஜூன் மாதம் நடக்கவிருக்கிறது.

தகுதி

B.E./B.Tech மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல், மினரல் ஆகிய பொறியியல் படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவருக்கு கட்டணமில்லை.

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment