Advertisment

இஸ்ரோ-வில் இலவச ஆன்லைன் படிப்பு; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?

ஜியோகம்ப்யூட்டேசன் மற்றும் ஜியோவெப் சர்வீஸ் தொடர்பான இலவச ஆன்லைன் படிப்புகளை வழங்கும் இஸ்ரோ; விண்ணப்பிப்பது எப்படி?

author-image
WebDesk
New Update
இஸ்ரோ-வில் இலவச ஆன்லைன் படிப்பு; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?

ISRO

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஜியோகம்ப்யூடேஷன் (Geocomputation) மற்றும் ஜியோவெப் (Geoweb) சேவைகளின் அடிப்படைகள் என்ற ஐந்து நாள் இலவச ஆன்லைன் படிப்பை நடத்துகிறது. புவி மற்றும் விண்வெளி அறிவியல் சார்ந்து கற்றுகொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

இஸ்ரோவின் ஆராய்ச்சி மையமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிமோட் சென்சிங் (IIRS) இந்த பாடத்திட்டத்தை நடத்துகிறது.

இதையும் படியுங்கள்: ஆங்கிலம் தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமே, அறிவுஜீவியின் அளவுகோல் அல்ல: பிரதமர் மோடி

ஜியோகம்ப்யூடேஷன் என்பது ஒரு வளர்ந்து வரும் துறையாகும், இது இடஞ்சார்ந்த தரவு பகுப்பாய்விற்கு நரம்பியல் நெட்வொர்க்குகள் போன்ற கணக்கீட்டு நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இது புவியியல் தகவல் அமைப்புகள் (Geographic Information Systems), டைனமிக் மாடலிங் (Dynamic Modelling), ஸ்பேஸ்-டைம் டைனமிக்ஸ் (Space time dynamics), நியூரோகம்ப்யூட்டிங் (Neuro Computing) போன்ற நுட்பங்களைக் கொண்டுள்ளது.

இஸ்ரோ இணையதளத்தின்படி, இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையம் புவி அறிவியலில் ரிமோட் சென்சிங் (Remote Sensing) மற்றும் ஜிஐஎஸ் (GIS) தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளில் ஈடுபட்டுள்ளது மற்றும் சமூக நலன்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்துகிறது. "சில முக்கிய ஆராய்ச்சி பகுதிகள் கடலோர மற்றும் கடல் புவி அறிவியல், புவி இயக்கவியல், புவி-அபாயங்கள், தாது, ஹைட்ரோகார்பன் மற்றும் புவி-தொல்பொருள் ஆய்வு ஆகியவற்றுடன் தொடர்புடையவை" என்று இணையதளம் கூறுகிறது.

இந்த இலவச பாட வகுப்புகள் 31 அக்டோபர் முதல் 4 நவம்பர் 2022 வரை நடத்தப்படும். அனைத்து நாட்களிலும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பயிற்சி நடைபெறும்.

தகுதிகள்

குறைந்த பட்சம் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இந்த பாடத்திட்டம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மத்திய அரசு அல்லது மாநில அரசு மட்டங்களில் பணிபுரியும் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற துறை வல்லுனர்களும் படிப்பில் சேரலாம்.

ஜியோகம்ப்யூடேஷன் என்பது, ஆன்லைன் ஜிஐஎஸ், திறந்த ஜியோடேட்டா களஞ்சியங்கள், பைதான் (Python) மற்றும் ஆர் (R) போன்ற நிரலாக்க கருத்துக்கள் (Programming), ஜியோ-வெப் சேவைகள் மற்றும் கிளவுட் அடிப்படையிலான புவிசார் தரவு செயலாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கும்.

விரிவுரை ஸ்லைடுகள், வீடியோ-பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள், திறந்த மூல மென்பொருள், விளக்கக்காட்சி உள்ளடக்கம், பரிந்துரைக்கப்பட்ட இணைப்புகள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட வீடியோ அமர்வுகள் போன்ற பாடப் படிப்பு பொருட்கள் மின்-வகுப்பு மூலம் கிடைக்கும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பாடத்திட்டத்தில் சேர விரும்புபவர்கள் https://elearning.iirs.gov.in/edusatregistration/student என்ற இணையதளப் பக்கம் மூலம் பதிவு செய்யலாம்.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.iirs.gov.in/iirs/sites/default/files/pdf/2022/CourseSchedule_109thCourse.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment