Advertisment

கேம்பஸ் இண்டர்வியூ; 40% ஆட்சேர்ப்பை குறைக்கும் ஐ.டி நிறுவனங்கள்

ஆட்சேர்ப்பு செய்வதை குறைக்கும் ஐ.டி நிறுவனங்கள்; கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை வழங்குவது 40% குறைய வாய்ப்பு

author-image
WebDesk
New Update
jobs

ஐடி வேலை

மென்பொருள் நிறுவனங்கள் பெரிய அளவில் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கவலை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ள நிலையில், இந்த நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் ஆட்சேர்ப்பு செய்வதையும் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

மென்பொருள் நிறுவனங்கள் செலவுகளைக் குறைப்பதற்காக சமீபகாலமாக அதிகளவிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதனால், தொழில்நுட்ப வேலை சந்தை தற்போது மிகவும் போட்டித்தன்மையுடன் உள்ளது. இந்த பணிநீக்கம் என்பது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற மாபெரும் நிறுவனம் வரை தொடர்கிறது.

இதையும் படியுங்கள்: IBPS RRB PO, Clerk 2023: வங்கி வேலை; பட்டப்படிப்பு தகுதிக்கு 8,812 காலியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

இந்தநிலையில், 2024 நிதியாண்டில் இந்திய ஐ.டி நிறுவனங்கள் 40 சதவிகிதம் குறைவான புதியவர்களை நியமிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்திய ஐ.டி நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் சுமார் 1,55,000 மாணவர்களை வேலைக்கு அமர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023 ஆம் ஆண்டில் 2,30,000 ஆக இருந்தது.

விப்ரோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஏற்கனவே வேலைவாய்ப்பு சலுகை வழங்கப்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதில் ஈடுபட்டு வருவதால், இந்த ஆண்டு கேம்பஸ் இண்டர்வியூ மூலம் ஆட்சேர்ப்பு செய்யாது எனத் தெரியவந்துள்ளது. இன்றைய திறமைச் சூழல், குறைந்து வரும் தேய்வு விகிதங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

விப்ரோ நிறுவனம் பிப்ரவரியில் புதியவர்களின் வேலை வாய்ப்புகளை கிட்டத்தட்ட 50 சதவிகிதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. மேலும், ஆரம்பத்தில் புதியவர்களுக்கு ரூ.6.5 லட்சம் சம்பள பேக்கேஜ்களை வழங்கியது. இருப்பினும், 'மாறும் மேக்ரோ சூழலை' காரணம் காட்டி, நிறுவனம் புதியவர்களின் பேக்கேஜ்ஜை மாற்றியமைப்பதாகக் குறிப்பிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment