Advertisment

மெட்ராஸ் ஐஐடி வழங்கும் அரிய வாய்ப்பு : 2 மாத ஃபெல்லோஷிப்  திட்டம்

இந்த ஃபெல்லோஷிப் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு  மாதம் ரூ.6,000 உதவிதொகை வழங்கப்படும் என்று மெட்ராஸ் ஐஐடி தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ITTM Summer Fellowship Programme - 2020

ITTM Summer Fellowship Programme - 2020

மிகவும் பிரபலமான கோடைகால ஃபெல்லோஷிப்  திட்டம் 2020 குறித்த அறிவிப்பை ஐ.ஐ.டி மெட்ராஸ் வெளியிட்டுள்ளது.   இந்த  ஃபெல்லோஷிப்   இரண்டு மாத காலத்திற்கு  நடைபெறும் என்றும் பங்கேற்கும் மாணவர்களுக்கு  மாதம் ரூ.6,000 உதவிதொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?

ஃபெல்லோஷிப்  காலம் - 20 மே மாதம் முதல் 19 ஜூலை மாதம் வரை

பொறியியல், மேலாண்மை, அறிவியல் மற்றும் சமூக அறிவியல்  படிக்கும் மாணவர்களிடையே உயர்தர ஆராய்ச்சியில் விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் மேம்படுத்துவதற்காக இந்த ஃபெல்லோஷிப்  திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தகுதி வரம்பு: கல்வித்தகுதி: மாணவர்கள் இளங்கலை பொறியியல் / தொழில்நுட்ப இளங்கலை /அறிவியல் இளங்கலை படிப்பு (அ) முதுகலை பொறியியல் / மாஸ்டர் ஆஃப் டெக்னாலஜி (எம்.டெக்) போன்றவைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஐ.ஐ.டி மெட்ராஸின் பின்வரும் துறைகளில்  இந்த ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

பொறியியல் பிரிவு :

வான்வெளிப் பொறியியல், பயன்பாட்டு மெக்கானிக்ஸ், உயிர் தொழில்நுட்பம், வேதியியல் பொறியியல், சிவில் பொறியியல், கணினி பொறியியல், பொறியியல் வடிவமைப்பு, மின் பொறியியல், இயந்திரப் பொறியியல், உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல், பெருங்கடல் பொறியியல்.

ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் : ராஜஸ்தான், தெலுங்கானா தொடர்ந்து அசத்தல்

அறிவியல் பிரிவு :  இயற்பியல், வேதியியல், கணிதம்,

மானுடக் கலையியல் மற்றும் சமூக அறிவியல்  -  மேலாண்மை ஆய்வுகள்.

publive-image

ஆர்வமுள்ளவர்கள், பிப்ரவரி மாதம் 29 வரை இந்த ஃபெல்லோஷிப்  திட்டத்திற்கு விண்ணபிக்கலாம் . iitm.ac.in  என்ற இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க  வேண்டும்

Iit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment