Advertisment

JEE Main 2019 தேர்வு எழுத தயாரா? நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் இவை தான்

JEE Mains 2019 Exam to be Conducted by NTA : குறிப்பாக, நீங்கள் இந்த தேர்வுக்கு அன்லைன் பதிவு செய்தபோது எந்த ஃபோட்டோ போட்டீர்களோ அதே ஃபோட்டோ தான் எடுத்துச் செல்ல வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
JEE Main 2019

JEE Main 2019

JEE Main 2019 Examination, NTA Issues Dos & Donts List on Official Advisory: இந்தியா முழுவதும் JEE தேர்வுகள் நடைபெற இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் தேசிய தேர்வு ஆணையம் மாணவர்களுக்கு சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.

Advertisment

2019ம் ஆண்டிற்காக JEE தேர்வை தேசிய தேர்வு ஆணையம் முதல் முதலாக நடத்துகிறது. இந்த ஆண்டு மட்டுமே 9 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வு எழுத இருக்கிறார்கள். இத்தேர்வின் மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைவாகவே இருந்தாலும், தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

JEE Main 2019 : ஜே.இ.இ தேர்வு விதிமுறைகள்

JEE தேர்வு குறித்து தேசிய தேர்வு ஆணையம் சில விதிமுறைகளை கட்டமைத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தேர்வு நடைபெறும் இடத்தைற்கு முந்தைய நாளே வந்து ஒரு முறை நேரம், தொலைவு அனைத்தையும் தெரிந்துக்கொள்வது அவசியம். அப்போது தான் மறுநாள் தேர்வுக்கு நேரத்திற்கு வர முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மாணவர்கள் அணிய வேண்டிய ஆடை குறித்து எவ்வித விவரமும் இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஏனெனில், 2019ம் ஆண்டின் UGC NET தேர்வின்போது ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தடுத்து நிறுத்தினர். அதன் காரணத்தினாலேயே தேர்வு எழுத முடியாமல் போனது. எனவே அதுபோன்ற விதிமுறைகள் ஏதேனும் இந்த அறிக்கையில் உள்ளதா என்றும் பெற்றோர்களும் மாணவர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

JEE Mains 2019: தேர்வுக்கு எதை எடுத்துச் செல்ல வேண்டும்:

  • உங்கள் ஹால் டிக்கெட்டின் கலர் பிரிண்ட் அவுட். A4 சைஸ் பேப்பரின் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ஒரே ஒரு பாஸ்போர்டு சைஸ் போட்டோ எடுத்துச் செல்ல வேண்டும். இது அடண்டன்ஸ் பேப்பர் ஒட்டுவதற்கு கட்டாயமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் இந்த தேர்வுக்கு அன்லைன் பதிவு செய்தபோது எந்த ஃபோட்டோ போட்டீர்களோ அதே ஃபோட்டோ தான் எடுத்துச் செல்ல வேண்டும்.
  • தேர்வு எழுதுபவர்கள், பேன் கார்டு, ஆதார், வோட்டர் ஐடி, பாஸ்போர்டு அல்லது ஓட்டுனர் உரிமம் போன்ற முக்கிய அடையாள அட்டை ஏதாவது ஒன்றை கட்டாயம் எடுத்துச் செல்லனும். அதுவும், ஒரிஜினல் மற்றும் செராக்ஸ் என இரண்டுமே கையில் இருக்க வேண்டும்.
  • PwD கேட்டகரியை சேர்ந்த மாணவர்கள் தங்களின் செர்ட்டிஃபிசேட்டை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில், தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும். இருப்பினும், தகுந்த ஆவணங்கள் இருந்தால் JEE தேர்வு எழுத அனுமதி கிடைக்கும்.

JEE Mains: எதை எல்லாம் எடுத்துச் செல்ல கூடாது:

  • பேனா, பென்சில், பென்சில் பாக்ஸ் போன்ற எந்த பொருட்களும் அனுமதி இல்லை.
  • பள்ளி/ கல்லூரி/ பல்கலைகழகங்கள்/ கோச்சிங் செண்டர்களில் கொடுக்கப்படும் ஐடி கார்டுகள் தகுந்த ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே அவற்றையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
  • குடிநீர் அல்லது திண் பண்டங்கள் எதுவும் உள்ளே எடுத்துச்செல்ல கூடாது.
  • கையில் வாட்ச், கால்குளேட்டர் அல்லது நவீன பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
  • தகுந்த ஐடி கார்டுகளை செராக்ஸாகவோ அல்லது செல்போனில் புகைப்படமாகவோ வைத்து காண்பித்தல் கூடாது. அப்படி இருந்தால் அனுமதி மறுப்பு.
  • கேமரா, செல்போன், டேப் ரெகார்டர், பேஜர், கால்குளேட்டர், ஹெட்செட், ஸ்கேல், லாக் டேப்பிள்ஸ் போன்றவற்றுக்கும் அனுமதி இல்லை.

JEE Main 2019: யாருக்கு/ எதுக்கு சிறப்பு சலுகை:

  • டையாபிடிக் மாணவர்களுக்கு மட்டும் குடிநீர் பாட்டில், பழம் மற்றும் மாத்திரைகள் உள்ளே அனுமதி. இதை தவிர பிஸ்கெட்/ சான்விச்/ சாக்லெட் போன்ற திண்பண்டங்கள் அனுமதி இல்லை.
  • பேனா/பென்சில் மற்றும் பேப்பர் அனைத்து ரஃப் வர்க்குக்காக தேர்வு அறைக்குள்ளேயே வழங்கப்படும்.

JEE Main 2019: அடெண்டன்ஸ் போடுவது எப்படி:

  • உங்களிடம் கொடுக்கப்படும் அடெண்டன்ஸில் தகுந்த சரியான விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • உங்களின் சரியான கையெழுத்து மற்றும் இடது கையில் கட்ட விரல் அச்சு பதிக்க வேண்டும்.
  • உங்களின் கலர் பாஸ்போர்டு சைஸ் ஃபோட்டோவை ஒட்டவும்.
  • இடது கையின் கட்ட விரல் அச்சு தெளிவாக இருக்க வேண்டும். டாட்டூ/மருதானி போன்ற எதுவும் அந்த அச்சை பாதிக்காமல் இருக்க வேண்டும் ஏனெனில், அவ்விரலின் கைரேகை முக்கியம்.
Iit Jee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment