Advertisment

ஜேஇஇ மெயின் தேர்வு: கடைசி நேர தயாரிப்புக்கு உதவும் புத்தகங்கள் பட்டியல்

JEE Main exam 2021 latest news updates :

author-image
WebDesk
New Update
ஜேஇஇ மெயின் தேர்வு: கடைசி நேர தயாரிப்புக்கு உதவும் புத்தகங்கள் பட்டியல்

JEE Main 2021: இம்மாத இறுதியில் ஜேஇஇ முதன்மைத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான தெளிவான பாதை வரைபடம் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும், தேர்வில் வெற்றியடைய மாணவர்கள் தங்களது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்

Advertisment

எஞ்சியிருக்கும் நேரத்தை திறமையாகப் பயன்படுத்தி பாடங்களில் தெளிவு பெற வேண்டும். பலவீனமாக  கருதும் பாடத்தலைப்புகளுக்கு உரிய நேரத்தை ஒதுக்குவதும், தெளிவான பகுதிகளை மனதில் நிறுத்திக் கொள்ளும் வகையில் புரட்டிப் பார்ப்பதும் அவசியமாகிறது.

நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருக்கும் மாணவர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கற்றுக்கொண்டவற்றை திரும்பி பார்ப்பது இதுவே சரியான தருணம். புதிய புத்தகங்களை முயற்சிப்பது நல்லதல்ல. இருப்பினுனம், சில பாடக்குறிப்புகள் தேர்வர்களின் வேகத்தையும் ஆற்றலையும்  மேன்மைபடுத்த உதவும்.

தேவை மற்றும் பிரத்தியோக சவால்களுக்கு ஏற்ப மாணவர்கள்  வெவ்வேறு பாடக்குறிப்புகளை கையாள வேண்டும்.

இதை அடிப்படையாக கொண்டு, பரிந்துரை செய்யத் தகுதியான சில பாடக்குறிப்புகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

Physics

  1. Concepts of Physics by H.C. Verma
  2. Fundamentals of Physics by Halliday, Resnick & Walker
  3. Understanding Physics by D.C. Pandey
  4. Problems in General Physics by I.E. Irodov
  5. Understanding physics by Freedman and Young
  6. Problems in Physics by S.S. Krotov
  7. Problems and solution of physics by Shashi Bhushan Tiwari

 

Chemistry

  1. NCERT/CBSE Textbooks (for Class 11th and 12th)
  2. Modern Approach to Chemical Calculations by R.C. Mukherjee
  3. Organic Chemistry by O.P. Tandon
  4. Concept of Physical Chemistry by P. Bahadur
  5. Concise Inorganic Chemistry by J.D. Lee
  6. Physical Chemistry by P.W. Atkins
  7. Organic Chemistry by Morrison and Boyd

 

Maths

  1. Objective Mathematics by R D Sharma
  2. Plane Trigonometry by S.L. Loney
  3. The Elements Of Coordinate Geometry by S.L. Loney
  4. Algebra by Dr S.K. Goyal

    Play with Graphs by Amit M Aggarwal

  5. Differential Calculus by Amit M Aggarwal
  6. Integral Calculus by Amit M Aggarwal
  7. Complete Mathematics for JEE Main TMH

 

ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு மேற்கூறிய புத்தகங்கள் உகந்தவை என நிரூபிக்கப்பட்டாலும்,மீதமுள்ள குறுகிய காலத்தில் மாணவர்கள் அனைத்தையும் வாசிப்பது மிகவும் சவாலான ஒன்றுதான். இருப்பினும்,  கருத்தியல் தெளிவு பெற இத்தகைய புத்தகங்கள் அவசியாமகிறது. அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாடத் தலைப்புகளில்  கூடுதல் மதிப்பெண்கள் பெற உதவி புரியும்.

11 மற்றும் 12ம் வகுப்பிற்கான  சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி புத்தகங்களை மீண்டும் மீண்டும் வாசிப்பது இன்றியமியாதது.

முந்தைய ஆண்டு வினாத்தாட்களை மாணவர்கள்   புறக்கணிக்கக்கூடாது. மாக் டெஸ்ட் வேகம் மற்றும் துல்லியத்தை அதிகரிக்க உதவுகிறது என்றால், முந்தைய ஆண்டு வினாத்தாட்கள் மாணவர்களின் தேர்வின் தரத்தையும், பல ஆண்டுகளாக நிகழ்ந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு நாளும் கடந்த ஆண்டு வினாத்தாளைத் தீர்ப்பது, செயல்திறனை மதிப்பீடு செய்வது மற்றும் பிழைகளை ஒழிப்பது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Iit Jee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment