Advertisment

ஜே.இ.இ மெயினில் தமிழக அளவில் முதலிடம்; கோவை மாணவியின் சக்சஸ் சீக்ரெட் இதுதான்!

கோவையில் உள்ள சுகுணா பி.ஐ.பி பள்ளி மாணவியான தீக்‌ஷா தனது முதல் முயற்சியிலே இயற்பியலில் 100, வேதியியலில் 99.98, கணிதத்தில் 99.97 மதிப்பெண்கள் பெற்று, தமிழக அளவில் முதலிடம்

author-image
WebDesk
New Update
ஜே.இ.இ மெயினில் தமிழக அளவில் முதலிடம்; கோவை மாணவியின் சக்சஸ் சீக்ரெட் இதுதான்!

JEE Main Result 2022: Coimbatore girl Deeksha Dhiwakar is Tamil Nadu topper, says followed teacher’s advice religiously: தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்த தீக்‌ஷா திவாகர், இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு 2022 இல் 99.99 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் பேசிய தீக்‌ஷா, கடந்த இரண்டு ஆண்டுகளாக JEE மெயின் தேர்வுக்கு தான் தயாராகி வருவதாகவும், JEE மெயின் தேர்வில் தான் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெறுவதை கொரோனா வைரஸ் தொற்றுநோய் பிரச்சனைகள் தடுக்கவில்லை என்றும், கூறினார். கோவையில் உள்ள சுகுணா பி.ஐ.பி பள்ளி மாணவியான தீக்‌ஷா தனது முதல் முயற்சியிலே இயற்பியலில் 100, வேதியியலில் 99.98, கணிதத்தில் 99.97 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்: அரசுப் பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை; மாணவர்கள் அவதி

“கொரோனா தொற்றுநோய் காரணமாக, எனது பதினொன்றாம் வகுப்பின் பெரும்பகுதி ஆன்லைன் வகுப்புகளாக நடந்தது. ஆனால் ஊரடங்கு காலத்தில் கூட பள்ளி எங்களுக்கு ஆதரவளித்தது, அதனால் தொற்றுநோய்களின் போது நான் அதிக சிரமத்தை எதிர்கொள்ளவில்லை, ”என்று தீக்‌ஷா கூறினார்.

ஜே.இ.இ மெயின் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள நிலையில், இதற்காக ஏதேனும் குறிப்பிட்ட முறை அல்லது பயிற்சியைப் பின்பற்றுகிறீர்களா என்று கேட்டபோது, ​​தீக்‌ஷா தனது ஆசிரியரின் ஆலோசனையைப் பின்பற்றியதாகக் கூறினார்.

"எங்கள் பள்ளியில் எங்களுக்கு பாட வகுப்புகள் இருந்தன, சில நாட்கள் எங்களுக்கு பயிற்சி தேர்வுகள் இருந்தன. ஆனால் தேர்வுக்கான தயாரிப்பு முயற்சி அப்படியே இருந்தது. நான் மூன்று பாடங்களுக்கும் ஒரே விதமான முயற்சியை மேற்கொண்டேன். JEE மெயினில் நடத்தப்படும் ஷிப்ட்களின் எண்ணிக்கை காரணமாக, என்னிடம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இருந்து நிறைய முந்தைய ஆண்டு வினாத் தாள்கள் இருந்தன, அதனால் நான் அவற்றை பயிற்சி செய்து பார்த்தேன். மேலும், பள்ளிகளில் பயிற்சி தேர்வுகள் நடத்தப்பட்டது, அதுவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் வித்தியாசமாக எதையும் செய்யவில்லை, ஆனால் பள்ளி நிர்வாகத்தின் ஆலோசனையைப் பின்பற்றி கடினமாக உழைத்தேன், ”என்று தீக்‌ஷா கூறினார்.

தனது இளைய சகோதரர் உட்பட தனது குடும்பத்தினர் மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும், இன்று அவர் சாதித்ததற்கு அவர்கள் மிகவும் பெருமைப்படுவதாகவும் தீக்‌ஷா கூறினார்.

தீக்‌ஷா தனது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும், அந்தத் தேர்வுகளையும் சிறப்பாக எழுதியுள்ளதாகவும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jee Main
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment