Advertisment

JEE Main 2021: கேள்விகள் இந்த ஆண்டு ஈஸி... கணிதம் மட்டும்தான்...? நிபுணர்கள் விளக்கம்

JEE Main Exam 2021 Question paper analysis : மேலும், சில முக்கியமான தலைப்புகளில் ( rotation) இருந்து கேள்விகள் இடம்பெறாதது கவனிப்புக்கு உள்ளானது. 

author-image
WebDesk
New Update
ஜேஇஇ மெயின் தேர்வு: ஆன்சர் கீ வெளியீடு, செக் செய்வது எப்படி?

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பிடெக், பிஇ படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த பொறியியியல் முதன்மை நுழைவுத் தேர்வு எளிதாக இருந்ததாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். பிப்- 23ம் தேதி தொடங்கிய ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 26-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

Advertisment

வினாக்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டதால், தேர்வு எளிதாக இருந்தாக மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

காலை அமர்வில், ஆய்வக பதிவுக் குறிப்பேட்டில் இருந்து அசாதாரண கேள்விகள் இருந்ததால் வேதியியல்  பாடம் கடினமாக இருந்தது. அதே போன்று, மாலை அமர்வில்  கணிதப் பாடப்பிரிவில் உள்ள சில கேள்விகள் கடினமாக இருந்ததாக வித்யா மந்திர் கல்வி நிலைய (வி.எம்.சி) இயக்குநரும், கல்வியாளருமான சவுரப் குமார் தெரிவித்தார்.

“காலை அமர்வில் இயற்பியல் பகுதியில், குறைக்கடத்தி (செமிகண்டக்டர்) தலைப்பில் இருந்து மூன்று கேள்விகள் இடம் பெற்றது. பொதுவாக, இந்த தலைப்பில் அதிகபட்சமாக ஒரு கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.

அதே போன்று இரண்டாவது அமர்வில், இயற்பியலில் கரைசல் (solution) தலைப்பில் இருந்து  மூன்று கேள்விகள் இருந்தன, பொதுவாக, இதிலும் ஒரே ஒரு கேள்வி மட்டுமே இருக்கும். மேலும், சில முக்கியமான தலைப்புகளில் ( rotation) இருந்து கேள்விகள் இடம்பெறாதது கவனிப்புக்கு உள்ளானது.

வேதியியல் இயற்பியல் பாடப் பகுதிகளில் சில நுட்பமான கேள்விகள் இருந்தபோதிலும், தேர்வின் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக கணிதப் பகுதி இருக்கலாம் என்று ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் தேசிய கல்வி இயக்குனர் அஜய் குமார் சர்மா கூறினார். “கணிதத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் நுழைவு பட்டியலில் இடம்பெற முடியும். ஒட்டுமொத்தமாக தேர்வு எளிதானது. வினாக்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இருப்பினும், கணிதப் பகுதி ஒப்பீட்டளவில் கடுமையாக இருந்தது. வேதியியல் பகுதியிலும், சில நுட்பமான கேள்விகள் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி புத்தங்களில் இருந்து எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜேஇஇ நுழைவுத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு  தேர்வு எளிதானதாக தோன்றலாம்” என்று தெரிவித்தார்.

வேதியியல் பாடப் பகுதியில் ( காலை அமர்வு) தனிம அட்டவணை, ரசாயன பிணைப்பு ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. கரிம வேதியியல், இரசாயன எதிர்வினை, ஒருங்கிணைப்பு கலவை, சமநிலை, கரைசல் (solution) போன்ற தலைப்புகளில் இருந்தும்  கேள்விகள் இருந்தன.  இயற்பியல் பாடப்பகுதியில், அளவீட்டியல் தலைப்பில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. 11 ஆம் வகுப்பை விட 12 ஆம் வகுப்பிலிருந்து அதிகமான கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

JEE Main Day 2 analysis: Experts say exam easier than previous years, math can be deciding factor

Jee Main
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment