Advertisment

ஜேஇஇ முதன்மை தேர்வு தொடங்கியது : கடைசி நிமிட டிப்ஸ் இங்கே

நாளைய ஜேஇஇ முதன்மை தேர்வில் சிறப்பாக செயல்பட, உங்கள் அமைதியையும், நம்பிக்கையான மனநிலையையும் பராமரிப்பது முக்கியமாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜேஇஇ முதன்மை தேர்வு தொடங்கியது : கடைசி நிமிட டிப்ஸ் இங்கே

jeemain.nta.nic.in, nta, nta jee main, jee main,jee main exam reporting time , jee main exam identiy card

தேசியத் தேர்வு  முகமை நாளை முதல் (ஜன.6) முதல் ஒருங்கிணைந்த பொறியியல் நுழைவு (ஜே.இ.இ மெயின் 2020) தேர்வுகளை நடத்துகிறது. இந்த நுழைவுத் தேர்வுக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong

காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் இரண்டு ஷிப்டுகளில் இந்த தேர்வு நடத்தப்படும்.

தேர்வுக்கு தயாராகும்,தேர்வர்களுக்கான கடைசி நிமிட உதவிக்குறிப்புகள் மற்றும் ஹிண்ட்ஸ்கள் இங்கே.

அட்மிட் கார்டு :  அட்மிட் கார்டு மற்றும் இதர அடையாள (உதரணமாக, ஆதார்) )அட்டையை உங்கள் பையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வேட்பாளர்கள் அதை எடுத்துச் செல்லத் தவறினால், அவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்வு அறைக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு Current Affairs பாடங்களை தயார் செய்வது எப்படி?

புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று:  பாஸ்போர்ட் / ஆதார் / பான் கார்டு / ஓட்டுநர் உரிமம் / வாக்காளர் அடையாள அட்டை / ரேஷன் கார்டு/ இ.ஆதார் /  வங்கி பாஸ் புக்/  12 ம் வகுப்பு வாரிய தேர்வு  அட்மிட் கார்டு (புகைப்படத்துடன் கூடிய ) போன்ற ஒரு புகைப்பட அடையாளச் சான்றிதழுடன் (ஒரிஜினல் ) வருமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் வழங்கிய அடியாள அட்டை / ஆதார் எண் இல்லாத ஆதார் பதிவு ரசீது/ மொபைல் போன்களில் உள்ள புகைப்படங்கள்  ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை கட்டயாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

publive-image தடைசெய்யப்பட்ட பொருட்கள்: மொபைல் போன்கள்  போன்ற எந்த கேஜெட்களையும் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம்

இன்று இரவு மெனக்கெட வேண்டாம் : தேர்வுக்கு  முந்தைய நாளில் குறைந்தது 6-7 மணிநேர தூக்கத்தைப் பெற முயற்சிக்கவும். இந்த நேரத்தில் ஒரு புதிய தலைப்பைத் தொடங்குவதில் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில், நாளைய  நாள் சிறப்பாகச் செயல்பட அமைதி மற்றும் நிதானம் மட்டுமே உங்கள் மனதிற்குத் தேவை.

சரியான நேரத்தில் தேர்வறைக்கு செல்லுங்கள்: தாமதமாக வந்து தேர்வு அனுமதிக்காமல் போவதைவிட, 30-40 நிமிடங்களுக்கு முன் தேர்வறையை  அடைவது எப்போதும் நல்லது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு நீங்களாகவே தயாராவது எப்படி ?

தேர்வு மையம்: கடைசி தருண அவசரத்தைத் தவிர்ப்பதற்காக, தேர்வுக்குச் செல்வதற்கு முன், உங்கள் தேர்வு மையத்தின் முகவரியை சரியாகச் சரிபார்க்கவும். (சென்னையில் பல தெருக்களின் பெயர்கள் பொருந்தும் வகையில் தான் உள்ளன. இன்று இரவே கூகுள் மேப் மூலம் தேர்லிவு படுத்திகொள்ளுங்கள்)

நம்பிகையோடு இருங்கள் : எந்தவொரு தேர்விலும் சிறப்பாக செயல்பட உங்கள் அமைதியையும், நம்பிக்கையான மனநிலையையும் பராமரிப்பது முக்கியமாகும். கடைசி நேரத்தில் புரட்டி பார்காத தலைப்புகளைப் பற்றி சிந்திக்க வேண்டாம் அல்லது பேப்பர் கடினமாக இருக்குமா?   அல்லது எளிதாக இருக்குமா? என்று புலம்ப வேண்டாம். நீங்கள் இதுவரை உழைத்த உழைப்பின் மீது நம்பிக்கை வைத்திருங்கள்.

நேர மேலாண்மை: ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு 30-40 வினாடிகளுக்கு மேல் எடுத்துகொள்ள வேண்டாம். நீங்கள் குழப்பமடைந்துவிட்டால் (அ) பதிலை அறிய முடியவில்லை என்றால் , அடுத்த கேள்விக்குச் சென்று, இறுதி நேரத்தில்  அந்த கேள்வ்வியை மீண்டும் முயற்சிக்கவும். நெகடிவ் மதிப்பெண்கள் உண்டென்பதால், கவனமாக இருங்கள்.  100 சதவீதம் உறுதியாக இருக்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளியுங்கள் .

Iit Jee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment