ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும்.
இந்நிலையில், ஜேஇஇ முதல்நிலை தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில், முதல் இரண்டரை லட்சம் இடங்களைப் பிடித்த மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வை அக்டோபர் மூன்றாம் தேதி எழுதவுள்ளனர்.
இதுவொரு புறம் இருக்க, மாணவர்கள் ஜேஇஇ கலந்தாய்வு தொடர்பான விவரங்களை தேட தொடங்கியுள்ளனர். இந்த கலந்தாய்வில் JoSAA முக்கிய பங்கு வகிக்கிறது.
JoSAA (கூட்டு இருக்கை ஒதுக்கீட்டு ஆணையம்) மத்திய கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தான், ஜேஇஇ மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பொது கலந்தாய்வை நடத்தும். இந்த கலந்தாய்வு மூலம் 31 என்ஐடி, ஐஐஇஎஸ்டி ஷிப்பூர், 26 ஐஐஐடி மற்றும் 29 அரசு நிதியுதவி தொழில்நுட்ப நிறுவனங்களில் (பிற-ஜிஎஃப்டிஐ) JEEமெயின் ரேங்க் அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஜேஇஇ மெயின் கலந்தாய்வு தேதி
அக்டோபர் 15, 2021 அன்று ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே கவுன்சிலிங் தேதிகள் அறிவிக்கப்படும். பெரும்பாலும், JoSAA கவுன்சிலிங் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேஇஇ மெயின் கவுன்சிலிங்: தயாராக வைத்திருக்க வேண்டியது எவை?
JoSAA, விண்ணப்பதாரர்களின் ஜெஇஇ தேர்வு விவரங்களைப் பயன்படுத்துகிறது. எனவே மாணவர்கள் புகைப்படங்களையும் அத்தகைய விவரங்களையும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், படிப்புகள் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன்பு சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
விருப்பமான படிப்புகளின் பட்டியலை தயார் செய்துகொள்ள வேண்டும்.
சிறந்த கல்லூரிகள் கிடைக்காவிட்டாலும், எந்த கல்லூரிகள் கிடைத்தால் ஓகே என்பதைத் தேர்வு செய்து பட்டியலிட வேண்டும்.
தற்போது, விருப்பமுள்ள பாடம் மற்றும் கல்லூரியின் பட்டியலை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது, சீட் இருக்கை தேர்வின் போது உதவியாக இருக்கும்.
கடந்தாண்டு ஜேஇஇ கட்ஆஃப் மார்க்கை கணக்கிடுவதன் மூலம், விருப்பப்பட்ட கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்பதை அறிந்துகொள்ளலாம்.
ஜேஇஇ கவுன்சிலிங் செயல்முறை 2021
கலந்தாய்வுக்குச் செல்வதற்கு முன்பு முழுமையான தகவலை அறிந்துகொள்வது அவசியம். ஏனென்றால், வாழ்வின் முக்கியமான தருணத்தில் தவறுகள் நடந்துவிடக்கூடாது. எனவே, JoSAA கவுன்சிலிங் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது.
ரெஜிஸ்ட்ரேஷன்: முதல் ஸ்டேப் ஜேஇஇ மெயின் கவுன்சிலிங்கில் பதிவு செய்வது தான். உங்களின் ஜேஇஇ மெயின் அப்லிகேஷன் நம்பர் மற்றும் கடவுச்சொல்லை உபயோகித்து ரெஜிஸ்டர் செய்திட வேண்டும்.
விருப்பத் தேர்வு நிரப்புதல்: இரண்டாவது ஸ்டேப், மாணவர்கள் தங்கள் படிப்பு மற்றும் கல்லூரி விருப்பங்களை அளிக்க வேண்டும். இதற்கு முன்பு சொல்லப்பட்ட பட்டியல் தயாரை உபயோகித்து கொள்ளலாம்.
மாக் சீட் அலாட்மென்ட்: மாணவர்களுக்கு கவுன்சிலிங் முறையை எளிதாக்க, josaa இரண்டு மாக் சேர்க்கை மாணவர்களுக்கு நடத்துகிறது. இதன் மூலம், அவர்கள் கவுன்சிலிங் செயல்முறையை நன்கு அறிந்துகொள்ளலாம்.
இருக்கை ஒதுக்கீடு: மாணவர்கள் அளித்த விருப்ப பாடம், கல்லூரி அடிப்படையில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். உடனடியாக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரும் அதற்குச் சம்மதித்து, இருக்கை ஒதுக்கீடுக்கு ஓகே சொல்ல வேண்டும். தேவைப்பட்டால் அடுத்த ரவுண்டில் உயர் தேர்வுக்கு செல்வதோ அல்லது அதே கல்லூரியில் வேறு பாடத்தில் சேருவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்
கட்டணம் செலுத்த வேண்டும்
ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையை உறுதிசெய்திட அதற்கான கட்டணத்தை முதலில் செலுத்த வேண்டும். அதன்பிறகு, கவுன்சிலிங்கில் மீதமிருக்கும் பிராசஸை முடிக்க வேண்டும்.
இதில், முன்பதிவு செய்யப்பட்ட எஸ்சி,எஸ்டி, மற்றும் பிடபிள்யுடி பிரிவினர் 15 ஆயிரம் ரூபாய் சீட் கட்டணமாகச் செலுத்த வேண்டும், மற்றவர்கள் ரூபாய் 35 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்தத் தொகை, கல்விக் கட்டணம் செலுத்தும் போது கணக்கில் கொள்ளப்படும். இதில், JoSAA பிராசஸிங் கட்டணம் 2000 ஆயிரம் ரூபாயும் அடங்கும்.
JoSAAவின் ஏழாவது சுற்றுக்குப் பிறகு காலியாக உள்ள இடங்களுக்கு, மத்திய இட ஒதுக்கீடு வாரியம்(CSAB) மூலம் என்ஐடி+ இடங்களுக்கு மட்டுமே சிறப்பு கவுன்சிலிங் நடத்தப்படும். இது ஒரு தனி செயல்முறை ஆகும்.