Advertisment

முதல் ஜூனியர் திறன் சாம்பியன்ஷிப்: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

கொரோனா பெருந்தொற்று காரணமாக முதல் மூன்று நிலை  போட்டிகள் (ஸ்கிரீனிங், தகுதிநிலை போட்டி, அரையிறுதி போட்டி) ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்படும்

author-image
WebDesk
New Update
முதல் ஜூனியர் திறன் சாம்பியன்ஷிப்: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

ஜூனியர் திறன் சாம்பியன்ஷிப் 2021: பள்ளிகூடங்களில்  வழக்கமான கல்வி மற்றும் தொழிற்கல்வி  ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (என்.எஸ்.டி.சி) மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் (சி.பி.எஸ்.இ) இனைந்து ஜூனியர் திறன் சாம்பியன்ஷிப்பின் (2021) முதல் பதிப்பைத் தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைனில் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பிப்ரவரி 19 வரை worldskillsindia.co.in/juniorSkills2021 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

இந்த ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டி ஆன்லைன் மூலம் நடைபெறும்.  நாடு முழுவதும் உள்ள 21,000 சிபிஎஸ்இ  பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

NSDC partners with CBSE to launch first edition of ‘Junior Skills Championship 2021

 

அடுத்த இரண்டு மாதங்களில் பள்ளிகளுக்கான திறன் போட்டிகள், தொழில் ஆலோசனை வெப்பினார்கள், இணையக் கருத்தரங்குகள், குழு விவாதங்கள், துவக்க முகாம்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ளும்  வட்டமேசை மாநாடுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

கொரோனா பெருந்தொற்று காரணமாக முதல் மூன்று நிலை  போட்டிகள் (ஸ்கிரீனிங், தகுதிநிலை போட்டி, அரையிறுதி போட்டி) ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்படும் என்றும், இறுதிப் போட்டி தலைநகர் டெல்லியில் நடைபெறும் என்றும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment