Advertisment

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Kanyakumari Health Dept invites application for various posts: கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரச் சங்கம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் தற்காலிக அடிப்படையில் மருத்துவ அலுவலர், மேற்பார்வையாளர், கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன. மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 22.12.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

மருத்துவ அலுவலர் (TB Cell Medical Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.45,000

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : MBA/ P.G Diploma in Health administration. ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.20,000

காசநோய் டி.ஆர்.டி.பி, எச்.ஐ.வி ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,000

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் Sanitary Inspector course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.15,000

ஆய்வக நுட்புனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் ஆய்வக நுட்புனர் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.10,000

காசநோய் சுகாதாரப் பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

மாவட்ட மருந்தாளுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : Degree/Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

தரவு உள்ளீடு இயக்குவர் (Data entry operator)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது சுய விவர விண்ணப்பக் கடிதத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

முகவரி :

தேர்வுக் குழு, மாவட்ட சுகாதாரச் சங்கம் – NTEP, மாவட்ட நெஞ்சகநோய் மையம், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகம், ஆசாரிப்பள்ளம், கன்னியாகுமரி – 629201

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.12.2021

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment