scorecardresearch

காரைக்குடி மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

காரைக்குடி மின்வேதியியல் நிறுவனத்தில் வேலை; உதவியாளர் பணியிடங்கள்; டிகிரி மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

காரைக்குடி மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!
காரைக்குடி மின்வேதியியல் நிறுவன வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ் நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்தில் திட்ட இணை உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்பட்டு வரும் ஒரு முதன்மையான நிறுவனமான, சிஎஸ்ஐஆர் – மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர் -சிஇசிஆர்ஐ), காரைக்குடி, பலதரப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலில் ஈடுபட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

இந்த நிறுவனத்தில் திட்ட இணை உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப சிறந்த கல்வியறிவு கொண்ட ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 16 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Senior Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Ph.D in Metallurgical and Materials Engineering / Ph.D in Chemistry படித்திருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 42,000

Project Associate –I

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வித் தகுதி: M.Sc. in Chemistry/ Physics / Nanoscience and Nanotechnology/ B.Tech in Chemical Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

Project Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: B.Sc. in Chemistry/ Physics/ Nanoscience and Nanotechnology  படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000

வயது தளர்வு: அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் 2023 மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்: CSIR – CECRI, COLLEGE ROAD, KARAIKUDI.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-01-2023_AdvtCopy.pdf என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Karaikudi csir cecri recruitment 2023 for assistant posts

Best of Express