Advertisment

கே.வி பள்ளிகளில் முதன்முறையாக கே.ஜி வகுப்புகள்; மாணவர் சேர்க்கை ஆரம்பம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதன்முறையாக கே.ஜி வகுப்புகள் தொடக்கம்; விண்ணப்ப பதிவுக்கு கடைசி தேதி அக்டோபர் 10 என அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாநில கல்விக் கொள்கை: மாவட்டம் வாரியாக கருத்து கேட்கும் தமிழக அரசு

கே.வி பள்ளிகள் என்று அழைக்கப்படும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாக்கள் முதல் முறையாக கே.ஜி.,(K.G) வகுப்புகளை துவங்குகின்றன. இதனையடுத்து, இதற்கான சேர்க்கை நடைமுறைகளை கே.வி பள்ளி அறிவித்துள்ளது.

Advertisment

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், கே.வி பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.ஐ பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்த பள்ளிகளில் கல்விக் கட்டணம் குறைவு.

இதையும் படியுங்கள்: MBBS, BDS Counselling 2022; எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கே.வி பள்ளிகளில் சேர்க்கை நடைமுறைகளைப் பொறுத்தவரை, மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், பொதுத் துறை நிறுவனப் பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. காலியிடங்கள் இருந்தால், பொது தரப்பினர் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.

கே.வி பள்ளிகளில் இதுவரை, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது ஐந்திலிருந்து, நடப்பு கல்வி ஆண்டில் ஆறாக உயர்த்தப்பட்டது.

இதை தொடர்ந்து, ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள், 'பால்வாடிகா' என்ற பெயரில், கே.வி பள்ளியில் துவங்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை, சென்னை ஐ.ஐ.டி.,க்குள் செயல்பட்டு வரும் கே.வி பள்ளி முதல்வர் வெளியிட்டுள்ளார்.

பால்வாடிகா முதல் பிரிவில் 3 முதல் 4 வயது வரையிலும், பால்வாடிகா இரண்டாம் பிரிவில் 3 வயது முதல் 5 வயது வரையிலும், பால்வாடிகா மூன்றாம் பிரிவில் 6 வயது வரையிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை, https://chennaiiit.kvs.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேரடியாக விண்ணப்ப பதிவு நடக்கும். வரும் அக்டோபர் 10ம் தேதி வரை காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை பதிவுகள் நடக்கும். பால்வாடிகா ஒன்றாம் பிரிவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சேர்க்கை வழங்கப்படும்.

இந்த வகுப்புகளுக்கு ஒரு காலாண்டுக்கு, ஒரு மாணவருக்கு 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு, 7305160907, 9710588122 என்ற எண்களில், ஐ.ஐ.டி.,யில் உள்ள கே.வி பள்ளியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Kendriya Vidyalaya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment