Advertisment

CUET 2022: பொது நுழைவுத் தேர்வில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்

CUET 2022 தேர்வானது, தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும். இந்த தேர்வை தொடர்ந்து, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் NTA ஆல் தயாரிக்கப்பட்ட தகுதிப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தவுள்ளது. பொதுவான கலந்தாய்வு நடைமுறை கிடையாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CUET 2022: பொது நுழைவுத் தேர்வில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்

பல்கலைக்கழக மானியக் குழு (UGC),நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பின் மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்தத் தேர்வானது, ஜூலை முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.

Advertisment

CUET 2022 தேர்வானது, தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும். இந்த தேர்வை தொடர்ந்து, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் NTA ஆல் தயாரிக்கப்பட்ட தகுதிப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தவுள்ளது. பொதுவான கலந்தாய்வு நடைமுறை கிடையாது.

புதிய பொது நுழைவுத் தேர்வின் 5 முக்கிய அம்சங்களை கீழே காணலாம்.

12 ஆம் வகுப்பு போர்ட் மார்க் பயனில்லை

இந்தாண்டு முதல், 45 மத்தியப் பல்கலைக் கழகங்களிலும் இளங்கலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இனி CUET மதிப்பெண்ணின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும். எனவே, 12 ஆம் வகுப்பு போர்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் பல்கலைக்கழக சேர்க்கையில் எந்த பங்கையும் கொண்டிருக்காது. அதேசமயம், பல்கலைக்கழகங்கள், CUETக்கான தகுதி அளவுகோலாக வாரியத் தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம்.

சீட் இட ஒதுக்கீட்டில் மாற்றமில்லை

யுஜிசி நிதியுதவி அளிக்கும் 45 மத்திய பல்கலைக்கழகங்களிலும் CUET தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. AMU, Jamia போன்ற சிறுபான்மை நிறுவனங்களும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அளவுகோலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

யுஜிசி தலைவர் எம் ஜக்தேஷ் குமார் கூறுகையில், CUET அத்தகைய நிறுவனங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களின் ஒதுக்கீட்டை பாதிக்காது. ஆனால் அவர்கள் அனைத்து மாணவர்களையும் பொதுவான தேர்வு மூலமாக தான் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்த மாணவர்களும் பொது இட ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களைப் போல CUET மூலம் வர வேண்டும். பல்கலைக்கழகங்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் எவ்வித மாற்றமும் கிடையாது என்றார்.

சர்வதேச மாணவர்களுக்கு CUET-லிருந்து விலக்கு

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு CUET-லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கையானது, தற்போதுள்ள சூப்பர்நியூமரரி சீட் அடிப்படையில் நடைபெறுகிறது.

13 மொழிகளில் தேர்வு

புதிய தேசிய கல்வி கொள்கையின்படி, CUET தேர்வு மாநில கல்வியை ஊக்குவிக்கிறது. அதன்படி, பொது நுழைவுத் தேர்வு இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் என 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

12 ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகங்கள் அடிப்படையில் தேர்வு

மூன்றரை மணி நேர கணினி அடிப்படையிலான நுழைவுத் தேர்வில் 12 ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகங்களின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் மல்டி சாய்ஸ் கேள்விகள் இடம்பெற்றிருக்கும் என UGC தலைவர் தெரிவித்தார். CUET மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும். தவறான விடைகளுக்கு மாணவர்கள் நெகட்டிவ் மார்க் வழங்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ugc Entrance Exams
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment