/tamil-ie/media/media_files/uploads/2019/03/school-759-4.jpg)
KVS admission 2019-20: கேந்திர வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்புக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்கியிருக்கிறது. இந்த பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர் kvsonlineadmission.in. தளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி தேதி, மார்ச் 19, 2019.
இரண்டாம் வகுப்பு அட்மிஷனுக்கு, ஏப்ரல் 2 முதல் 9 ஆன்லைனில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
இதற்கிடையே 10-ம் வகுப்பு, பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும், உடனடியாக 11-ம் வகுப்புக்கான முன்பதிவு தொடங்கும்.
முதல் வகுப்புக்கு மார்ச் - 26, இரண்டாம் வகுப்புக்கு ஏப்ரல் - 9, மூன்றாம் வகுப்புக்கு ஏப்ரல் - 23 ஆகிய தேதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்படும்.
கடந்த வருடம் 1 லட்சம் இடங்களுக்கு, 6,48,941 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள்.
KVS admission 2019-20: எப்படி அப்ளை செய்வது?
கேந்திர வித்யாலாயாவின் kvsangathan.nic.in தளத்தை விசிட் செய்யவும்.
ஹோம் பேஜில் இருக்கும் ’online registration for admission' என்பதை க்ளிக் செய்யவும்.
இப்போது ஒரு பாக்ஸ் திறக்கும், அதையும் க்ளிக் செய்யவும்.
புதிய பக்கம் திறக்கும்.
நியூ ரெஜிஸ்ட்ரேஷன் என்பதை க்ளிக் செய்யவும்.
வழிமுறைகளை நன்கு படித்து விட்டு செக் பாக்ஸை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவு செய்துக் கொள்ளவும்.
இந்தியா முழுவதும் 1,137 கேந்திர வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் முன்னுரிமையின் படி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us