தேசிய தேர்வு முகமையால் (என்.டி.ஏ) 2020ம் ஆண்டிற்கான ஒருகிணைந்த முதன்மை நுழைவுத் தேர்வு வரும் ஜனவரி 6ம் தேதி முதல் 11 வரை நடத்தப்படுகிறது. 11 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் கலந்து கொள்ளும் இந்த தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் கடந்த 6ம் தேதி jeemain.nic.in என்ற இணையதளைத்தில் வெளியிடப்பட்டது. இன்னும் ஒரு மாதம் கூட மிச்சமில்லாத நிலையில்,தேர்வர்கள் தங்கள் செயல்முறையை துரிதப்படுத்த வேண்டிய நேரத்திற்கு வந்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
அட்மிட் கார்டை வந்துவிட்டது என்ற செய்தி தாங்கள் படித்து வைத்த பாடப்பகுதியை மட்டும் திரும்ப படிக்க வேண்டும் என்ற பொருளை உணர்த்துகிறது. தேர்வுக்கான கடைசி மாதம் மிகமிக முக்கியமானது, புத்திசாலித்தனத்தோடு நாட்களை பயன்படுத்தப்பட வேண்டும்.
உதாரணமாக, படிக்காத புதிய தலைப்புகளைத் தொடங்க இது நேரமல்ல. முதல் முறையாக படித்து புரிந்துகொள்வதற்கு அதிகப்படியான நேரமும், சக்தியும் தேவைப்படும் . எனவே உங்களது திட்டம் படித்ததை திருத்தமாகவும், தெளிவாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
1. முதலில் அட்டவணையை உருவாக்குங்கள் :
எந்தவொரு நுழைவுத் தேர்வுக்கும் அட்டவணை முக்கியம். அதனின் மிக முக்கியம் போட்ட அட்டவனையை மனசாட்சிக்கு உட்பட்டு பின்தொடர்வது. கடைசி ஒரு மாதத்திற்கான ஜேஇஇ முதன்மை படிப்பு அட்டவணையை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கு பொதுவான விதி என்று எதுவும் இல்லை. எவ்வாறாயினும், மூன்று பாடங்களையும் ரிவிசன் செய்வதற்கான நேரத்தை அட்டவணையில் உறுதி செய்ய வேண்டும். மாக் டெஸ்ட்டின் அவசியத்தை உங்கள் அட்டவணை பிரதிபலிக்க வேண்டும்
2. முந்தைய ஆண்டு வினாத் தாள் முக்கியம்:
முந்தைய ஆண்டு வினாத்தாளை வேட்பாளர்கள் புறக்கணிக்கக்கூடாது. மாக் டெஸ்ட் வேகம் மற்றும் துல்லியத்தை அதிகரிக்க உதவுகிறது என்றால், முந்தைய ஆண்டு வினாத்தாள் வேட்பாளர்களுக்கு தேர்வின் தரத்தையும், பல ஆண்டுகளாக நிகழ்ந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு கடந்த ஆண்டு வினாத்தாளைத் தீர்ப்பது, செயல்திறனை மதிப்பீடு செய்வது மற்றும் பிழைகளை ஒழிப்பது என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
3. அதிக மாக் டெஸ்ட்கள் வேண்டும் :
ஜே.இ.இ மெயின் நெருங்கி வருவதால், வேட்பாளர்கள் மாக் டெஸ்ட்டின் மூலம் தங்களை சோதனை செய்வதை அதிகரிக்க வேண்டும். தற்போது ஒரு நாளைக்கு ஒரு மாக் டெஸ்ட் எழுதினால், மூன்றாவது வாரத்தின் இறுதியில் குறைந்தது தினமும் 4 மாக் டெஸ்டுகளை எடுக்கும் அளவிற்கு தயாராக வேண்டும் . ஜேஇஇ மெயின்ஸ் ஒரு கணினி அடிப்படையிலான சோதனை என்பதால், வேட்பாளர்கள் ஆன்லைன் மாக் டெஸ்ட்டை அதிகப்படுத்துவது தேர்வில் வேகத்தையும் துல்லியத்தையும் மேம்படுத்த உதவும்.
4. வகுப்பு 11 பாடத்திட்டங்களைத் திரும்ப திரும்ப வாசிக்கவும்:
ஜே.இ.இ மெயினிஸ் தேர்வில் சுமார் 35 சதவீதம் முதல் 40 சதவீத கேள்விகள் 11ம் வகுப்பு பாடத்திட்டங்களிலிருந்து கேட்கப்படுகின்றன. நாம் ஏற்கனவே 11 ம் வகுப்பில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்திருப்போம் . இருந்தாலும், அதனை தெளிவுப் படுத்துங்கள். 11 ம் வகுப்புதானே என்று அதனை புறக்கணிக்க வேண்டாம். ஏனெனில், ஜேஇஇ மெயின்ஸ் தேர்வுக்கான அனைத்து அடிப்படைகளும் இந்த வகுப்பில் தான் உள்ளன.
5. தேர்வில் சரியான கேள்விகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள்.
ஜேஇஇ மெயினிஸ் தேர்வில் நெகடிவ் மதிப்பெண் இருப்பதால், சரியான கேள்விகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும். எனவே,தாங்கள் நன்கு அறிந்த பாடத் திட்டங்களில் கவனம் செலுத்துவது சால சிறந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.