Advertisment

LIC AAO 2019: எல்.ஐ.சி-யில் 590 காலியிடங்கள்!

தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, ரூ.32,795 முதல் 55,335 ஊதியம் வழங்கப்படும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LIC Schemes, LIC Policies

LIC Policies to be closed

LIC AAO recruitment 2019: லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனப்படும் எல்.ஐ.சி-யில் (AAO) 590 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அதிகாரி பணியிடமான இதற்கு licindia.in. தளத்தில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் டிகிரி முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி பெறும் நபர்களுக்கு ரூ.32,795 முதல் 55,335 வரை ஊதியம் வழங்கப்படும்.

LIC AAO recruitment 2019: காலியிட விபரங்கள்

மொத்த காலியிடம் - 590

AAO (பொது) - 350

AAO (ஐ.டி) - 150

AAO (சி.ஏ) - 50

AAO (நிபுணர்) - 30

AAO (ராஜ்பாஷா) - 10

வயது வரம்பு 

விண்ணப்பதாரர் 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்

தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, ரூ.32,795 முதல் 55,335 ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் 

பொதுப்பிரிவினர் ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100/- செலுத்தினால் போதும்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பம் வெளியீடு - மார்ச் 02

ஆன்லைனில் அப்ளை செய்ய கடைசி நாள் - மார்ச் 22

அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்ய - ஏப்ரல் 22 முதல் 30 வரை

முதல் நிலைத் தேர்வு நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நாள் - மே 4 மற்றும் 5

எதிர்பார்க்கப்படும் மெயின் தேர்வு நாள் - ஜூன் 28, 2019

எப்படி அப்ளை செய்வது?

licindia.in என்ற தளத்தில் மார்ச் 22-ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

 

 

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment