12 ஆம் வகுப்புக்குப் பிறகு, பெரும்பாலான மாணவர்கள் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்த வண்ணம் இருப்பார்கள் . பெற்றோர்களும் தங்கள் குழந்தைக்கு சிறந்த எதிர்காலாத்தை தேர்ந்தெடுப்பதில் குழம்புவார்கள். எனவே, பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின் இந்தியாவில் நடத்தப்படும் சில நுழைவுத் தேர்வுகள் தொடர்பான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பொறியியல் நுழைவுத் தேர்வுகள் -
இந்தியாவில் மிகவும் பிரபலமான உயரக் கல்வி படிப்புகளில் ஒன்று பொறியியல். பி.இ பொறியியல் என்பது ஒரு கோட்பாடு அடிப்படையிலான பாடமாகும், பி.டெக் மிகவும் நடைமுறை அணுகுமுறையைக் கொண்டுள்ளது.
யுஜி பொறியியல் சேர்க்கைக்கான மிகப்பெரிய நுழைவுத் தேர்வு ஜேஇஇ மெயின். இத்தேர்வை ஜனவரி,ஏப்ரல் ஆகிய மாதங்களில் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியால் இரண்டு முறை நடத்தப்படுகிறது . இந்த தேர்வின் மதிப்பெண் என்.ஐ.டி, சிஎஃப்டிஐ, ஐஐஐடி போன்ற நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இருப்பினும், முதன்மையான பொறியியல் கல்வி நிறுவனங்களான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) ஜேஇஇ அட்வான்ஸ்ட் என்ற நுழைவுத் தேர்வின் மூலமாகவே மாணவர்களை சேர்க்கின்றது.
தேசிய அளவில் நடைபெறும் இந்த ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என்றால் ஒருவர் ஜேஇஇ மெயின் தேர்வில் ஒருவர் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
தனியார் பல்கலைக்கழகங்களில் பொறியியல் சேர்க்கை ஜேஇஇ மெயின் அல்லது அந்தந்த பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்கை நடைபெறுகிறது. விஐடி, எஸ்ஆர்எம், மணிப்பால், ஜிஐடிஏஎம், கேஐஐடி போன்றவைகள் தனியார் பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வுகளின் பெயர்களாகும்.
இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் -
எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் மூலம் நடத்தப்படுகிறது. சுமார் 12 முதல் 13 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
நீட் தேர்வு தவிர ஜிப்மர், எய்ம்ஸ் (மருத்துவமனைகள்) போன்ற நுழைவுத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்படுகின்றன . இருப்பினும், சமிபத்திய மத்திய அரசின் கூற்றுப்படி, மத்திய அரசிற்கு கீழ் இயங்கும் ஜிம்பர் மருத்துவமனை மற்றும் அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கையும் இனி நீட் நுழைவுத் தேர்வு மூலமாகவே நடத்தப்படும்.
இந்தியாவில் கட்டிடக்கலை படிபிற்கான நுழைவுத் தேர்வுகள் -
கட்டிடக்கலை கீழ் இரண்டு படிப்புகள் உள்ளன, இளங்கலை கட்டிடக்கலை (பி. ஆர்ச்) திட்டமிடல் இளங்கலை (பி. பிளான்). யுஜி கட்டிடக்கலைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு ஜேஇஇ மெயின், என்ஏடிஏ(NATA) போன்றவைகளாகும் .
இந்த இரண்டு தேர்வுகள் தவிர, ஐஐடி கல்லூரிகள் ஜேஇஇ அட்வான்ஸ்ட் ஏஏடி நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்கையை நடத்துகின்றன . சத்தியபாமா பல்கலைக்கழகம் போன்ற சில தனியார் கல்லூரிகள் தனக்கான நுழைவுத் தேர்வை தன்னிச்சையாக நடத்துகின்றன.
4. இந்தியாவில் பேஷன் மற்றும் டிசைன் நுழைவுத் தேர்வுகள் -
பேஷன் படிப்புகளுக்கு என்று தனியாக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படவில்லை. என்ஐஎஃப்டி என்ஐடி, பேர்ல் அகாடமி போன்ற பல்வேறு நிறுவனங்கள் தனித்தனியான நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.
பி.டெஸ் பாடநெறி சமிப காலமாக பிரபலமடைந்து வருகிறது . தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இது ஒரு அற்புதமான பாடமாகும். ஐ.ஐ.டி உயரக் கல்லூரிகள் யு.சி.இ.இ.டி நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இந்த நுழைவுத் தேர்வின் மதிப்பெண்ணை பிற 17 கல்வி நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன.
5. இந்தியாவில் சட்ட நுழைவுத் தேர்வுகள் : எல்எல்பி, பிஏ எல்எல்பி,பிபிஏ எல்எல்பி போன்ற சட்டப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய அளவிலும், மாநில அளவிலும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் முதன்மையாக கருதப்படுவது சிஎல்ஏடி. இது தேசிய சட்ட பல்கலைக்கழகத்தால் (NLU) நடத்தப்படுகிறது. இருப்பினும், என்எல்யு டெல்லி பல்கலைக்கழகம் ஏஐஎல்இடி என்ற நுழைவுத் தேர்வை நடத்துகிறது . அகில இந்திய பார் தேர்வு என்ற நுழைவுத் தேர்வு, இந்தியாவில் நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சி செய்யும் ஒரு வக்கீல்களின் திறனை ஆராய்வதற்காக நடத்தப்படுகிறது.
ஹோட்டல் மேலாண்மை நுழைவுத் தேர்வுகள் : ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி படிப்புகளுக்காக பல உயரக் கல்விநிறுவனங்கள உள்ளன. ஹோட்டல் மேனேஜ்மென்ட்க்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்சிஎச்எம்சிடி ஜேஇஇ (NCHMCT JEE) . இந்த தேர்வு, ஏப்ரல் மாதத்தில் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியால் நடத்தப்படுகிறது.
இந்தியாவில் மீடியா மற்றும் ஜர்னலிசம் நுழைவுத் தேர்வுகள் - அச்சு அல்லது மின்னணு ஊடகங்களில் ஒரு தொழிலை உருவாக்க விரும்பும் மாணவர்கள், ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நுழைவுத் தேர்வுகளில் தோன்றுவதன் மூலம் அவ்வாறு செய்ய ஏராளமான விருப்பங்கள் உள்ளன.
இந்தியாவின் பல்வேறு தனியார் மற்றும் பொது நிறுவனங்களால் மணிப்பால் பல்கலைக்கழகம், அமிர்தா பல்கலைக்கழகம், ஆசிய அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டிவி நொய்டா, எஃப்டிஐஐ, சத்யஜித் ரே பிலிம், மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், சிம்பியோசிஸ் போன்றவை பரீட்சைகளை நடத்துகின்றன.