சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் நிறுவனமான மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் (Madras Fertilizers Limited) காலியாக உள்ள நிர்வாகி டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், மேனேஜ்மெண்ட் டிரெய்னி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் : 141
நிர்வாகி -62
டெக்னிகல் அசிஸ்டெண்ட் -48
மேனேஜ்மென்ட் டிரெய்னி -31
கல்வித் தகுதி:
நிர்வாகி - பி.காம், ஏதேனும் ஓர் துறையில் பட்டம், பட்டய கணக்காளர் (சி.ஏ)
தொழில்நுட்ப உதவியாளர் - பி.எஸ்சி வேதியியல், டிப்ளமா
மேனேஜ்மென்ட் டிரெய்னி - எம்.எஸ்சி வேதியியல், எம்.எஸ்சி கணினி அறிவியல், பி.இ. கணினி அறிவியல் பொறியியல், பி.டெக் தகவல் தொழில்நுட்பம், பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங், பி.எஸ்சி வேளாண்மை, எம்பிஏ, பி.டெக் பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி, பி.இ. பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங், எம்.காம், பட்டய கணக்காளர் (சி.ஏ)
வயது வரம்பு : 25 முதல் 28 வயதிற்குள் இருத்தல் வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.madrasfert.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அக்டோபர் 16, 2019
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500
மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
பணியிடங்களுக்கான அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்