Advertisment

கல்லூரியில் சேராமலே பட்டம் பெற முயன்ற 117 மாணவர்கள்; மோசடியைத் தடுத்த சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகத்தில் மோசடியாக பட்டம் பெற முயன்ற 117 மாணவர்கள்; முறைகேட்டை தடுத்து, தவறிழைத்தவர்களை கண்டறிய விசாரணையை முடுக்கிவிட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாகம்

author-image
WebDesk
New Update
கல்லூரியில் சேராமலே பட்டம் பெற முயன்ற 117 மாணவர்கள்; மோசடியைத் தடுத்த சென்னை பல்கலைக்கழகம்

Madras university finds 117 grads abusively try to get degree: சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறாமல் பட்டம் பெற முயன்ற குறைந்தபட்சம் 117 மாணவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பிகாம் மற்றும் பிபிஏ பட்டங்களை பெற விரும்பியுள்ளனர்.

Advertisment

1980-81ல் இருந்து அரியர் வைத்துவர்களை ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்கும் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் முடிவில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது. இதில் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மோசடி செய்பவர்கள், இந்த மாணவர்கள் கல்லூரி படிப்பு முடித்ததற்கான சான்றிதழ்களை போலியாக தயார் செய்து, தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் உண்மையான விண்ணப்பதாரர்களைப் பின்தொடரும் வரிசை எண்கள் வழங்கப்பட்டன. 2020 டிசம்பரில் 117 மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர்.

பல்கலைக்கழக அதிகாரிகளில் யாரேனும் இந்த முறைக்கேட்டிற்கு உதவி, உண்மையான வரிசை எண்களை மாணவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டிசம்பர் 2020 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சிலர் தங்கள் பட்டப்படிப்பு சான்றிதழ்களை வெளியிடுமாறு பல்கலைக்கழகத்திடம் கேட்டபோது இந்த முறைகேடு வெளிப்பட்டது. நெறிமுறையைப் பின்பற்றி, அவர்கள் படித்ததாகக் கூறப்படும் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை அவர்கள் செலுத்தினார்களா என்பதை பல்கலைக்கழகம் சரிபார்த்தது. அவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தியதற்கான பதிவு அல்லது அவர்களின் சேர்க்கை விவரங்கள் எதுவும் இல்லை.

இந்த மாணவர்கள் தலா ரூ.3 லட்சத்தை மோசடிக்கு பின்னால் இருந்தவர்களுக்கு செலுத்தியதாக பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார். ஆனால் பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணம் ரூ.20,000 மட்டுமே.

நிரந்தர தேர்ச்சி பதிவேட்டை (பிபிஆர்) சரிபார்க்கும் போது, ​​சில விண்ணப்பதாரர்களின் பெயர்கள் கல்விக் கட்டணம் மற்றும் டிசிபி பதிவேட்டில் காணப்படவில்லை, மேலும் சேர்க்கை விண்ணப்பங்கள் சேர்க்கை பிரிவில் இல்லை. 117 விண்ணப்பதாரர்களின் தற்காலிக அல்லது பட்டமளிப்பு சான்றிதழ்களை ரத்து செய்யவும், டிசம்பர் 2020 இன் நிரந்தர பாஸ் பதிவேட்டில் (பிபிஆர்) இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் பல்கலைக்கழகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில், பல்கலைக்கழகத்தின் மூடப்பட்ட படிப்பு மையங்களின் முகவர்கள், தேர்வு எழுதுவதற்கான தொற்றுநோய் தளர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ள தங்கள் பழைய மாணவர்களை அணுகியிருக்கலாம். மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து எந்தக் கண்காணிப்பும் இன்றி தேர்வு எழுதவும், விடைத்தாள்களை சில மணி நேரம் கழித்து பதிவிடவும் அல்லது அப்லோடு செய்யவும் அனுமதிக்கப்பட்டனர், என்றார்

117 வேட்பாளர்களும் தங்களின் தாள்களை முடித்துவிட்டதால், இது ஒரு பேக்கேஜ் டீலாக இருக்கலாம் என்று பேராசிரியர்கள் தெரிவித்தனர். தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கான வரம்பை விரிவுபடுத்துமாறு பல்கலைக்கழகத்தை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கௌரி கூறுகையில், இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழகம் விசாரணைக் குழுவை அமைக்கும். சிலர் ஆன்லைன் தேர்வு செயல்முறையைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். ஆனால், உள் சரிபார்ப்பு செயல்முறை சரியான நேரத்தில் இந்த மோசடியை தடுத்து நிறுத்தியது. மோசடியில் ஈடுபடுவோர் மீது பல்கலைக் கழகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும், என்று துணைவேந்தர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madras University Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment