சென்னை பல்கலை ‘ரிசல்ட்’ இன்று வெளியாகிறது… ‘செக்’ செய்வது எப்படி?

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று (ஜனவரி 12) வெளியிடப்படுகின்றன.

எல்லோருக்கும் எப்போதும் கல்வி என்ற நோக்கோடு தொடங்கப்பட்ட தொலைநிலை கல்வி மூலம் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பட்டப்படிப்புகள் பயின்று வருகின்றனர்.பணிக்கு செல்பவர்களும் பகுதி நேரமாக படிக்கும் வாய்ப்பை தொலைநிலைக் கல்வி வழங்குகிறது.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி படிப்பில் தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முடிவுகள் வெளியாகவுள்ளன.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ” தொலைநிலை கல்வியில் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., – எம்.எஸ்சி., – ஐ.டி. படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும்.

தேர்வர்கள் http://www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், இன்று மாலை 6:00 மணிக்கு தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் அரியர் வைத்துள்ளவர்களுக்கான சிறப்பு ஆன்லைன் தேர்வில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, உரிய படிப்பில் சேராமலேயே பட்டம் பெற முயன்றது சம்பவம் கண்டுப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madras university long distance education result released how to check

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com