scorecardresearch

சென்னை பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளராக பணிபுரிய அருமையான வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Madras university
சென்னை பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 59 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: அழகப்பா பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

ஆராய்ச்சி உதவியாளர் (Research Fellowship)

காலியிடங்களின் எண்ணிக்கை : 59

பாட வாரியாக காலியிட விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ.7,000 + 5,000

தேர்வு செய்யப்படும் முறை : சம்பந்தப்பட்ட படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.unom.ac.in/webportal/uploads/announcements/urf_notification_20230309120756_44046.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Registrar, University of Madras, Chepauk, Chennai 600 005

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.unom.ac.in/webportal/uploads/announcements/urf_notification_20230309120756_44046.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Madras university recruitment 2023 for assistant jobs apply soon