Advertisment

மதுரை ரயில்வே கோட்டத்தில் வேலை; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Madurai Railway Division invites application for computer operator vacancies: மதுரை ரயில்வே கோட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு; 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today : சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஆண் பயணிகளுக்கு நேர கட்டுப்பாடுகளில் தளர்வு

மதுரை ரயில்வே கோட்டத்தில் அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

மதுரை ரயில்வே கோட்ட பொறியியலாளர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் கணினி ஆப்ரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (Computer Operator and Programming Assistant) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 24 பயிற்சி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பயிற்சி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 01.11.2021

கணினி ஆப்ரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (Computer Operator and Programming Assistant)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 24

கல்வித் தகுதி : 10 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,000 – 7,000

பயிற்சி கால அளவு: 15 மாதங்கள் (அடிப்படை பயிற்சி – 3 மாதங்கள், வேலைசார்ந்த பயிற்சி – 12 மாதங்கள்)

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க  https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6156e005f6f9d7614652121a  என்ற இணையத்தள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.11.2021

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Madurai Indian Railways Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment