Advertisment

கலெக்டர் ஆபிஸில் உதவியாளர் வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Mayiladuthurai collector office recruitment office assistant jobs: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News Highlights: தமிழ் வழியில் படித்தால் அரசுப் பணியில் முன்னுரிமை; அரசாணை வெளியீடு

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.12.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்ச வயதாக SC/SCA/ST வகுப்பினருக்கு 37 வயதும், BC/MBC/BCM வகுப்பினருக்கு 34 வயதும், இதர பிரிவினருக்கு 32 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவர குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மயிலாடுதுறை மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.12.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2021/12/2021120774.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment