Advertisment

IB ACIO 2022; உளவுத்துறை வேலைவாய்ப்பு; 150 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய உளவுத்துறையில் தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
IB ACIO 2022; உளவுத்துறை வேலைவாய்ப்பு; 766 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

MHA IB recruitment 2022 for 150 ACIO posts apply soon: இந்திய உளவுத்துறை பணியகத்தில் உதவி புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி புலனாய்வு அலுவலர் (தொழில்நுட்பம்) (Assistant Central Intelligence Officer - Tech) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவி புலனாய்வு அலுவலர் (தொழில்நுட்பம்)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 150

கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் : 56

மிண்ணனு மற்றும் தகவல் தொடர்பியல் : 94

கல்வித் தகுதி : B.E or B.Tech in Electronics/ Electronics and Telecommunication/ Electronics and communication/ Electrical and Electronics / Information Technology / Computer science/ Computer Engineering (or) Master’s Degree in Electronics/ Physics/ Computer applications

வயதுத் தகுதி : 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 44,900 – 1,42,400

தேர்வு செய்யப்படும் முறை : 2022 ஆம் ஆண்டில் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செய்யப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்: திருநெல்வேலி மருத்துவ கல்லூரி வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!

GATE தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://mharecruitment.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.05.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mha.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs Central Government Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment