Advertisment

IB ACIO 2022; உளவுத்துறை வேலைவாய்ப்பு; 766 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய உளவுத்துறையில் புலனாய்வு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 766 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IB ACIO 2022; உளவுத்துறை வேலைவாய்ப்பு; 766 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

MHA IB recruitment 2022 for 766 ACIO posts apply soon: இந்திய உளவுத்துறை பணியகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி புலனாய்வு அலுவலர், இளநிலை புலனாய்வு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 766 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: TNEA கவுன்சிலிங்; குறைந்த கட் ஆஃப்-க்கும் டாப் காலேஜ் கிடைக்க… இப்படி செய்யுங்க!

பதவிகளும் காலியிடங்களின் எண்ணிக்கையும்

ACIO-I/ Exe - 70

ACIO-II/ Exe – 350

JIO-I/ Exe – 50

JIO-II/ Exe -100

SA/ Exe – 100

JIO-I/MT – 20

JIO-II/MT – 35

SA/MT – 20

JIO-II/Tech – 07

Halwai-cum-Cook – 09

Caretaker 5

கல்வித் தகுதி : ACIO-I/ Exe, ACIO-II/ Exe, JIO-I/ Exe, JIO-II/ Exe, SA/ Exe, JIO-I/MT, JIO-II/MT, SA/MT, JIO-II/Tech ஆகிய பதவிகளுக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Halwai-cum-Cook பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Caretaker பதவிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து பதவிகளுக்கு முன் அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : 7 ஆவது ஊதியக்குழுவின் படி வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ. 1,51,100 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :  நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mha.gov.in/sites/default/files/VACANCYCIRCULARIB_04072022.pdf என்ற இணையதள பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.08.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mha.gov.in/sites/default/files/VACANCYCIRCULARIB_04072022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Central Government Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment