Advertisment

பொறியியல் கவுன்சலிங் எப்போது? அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பொறியியல் கலந்தாய்வு; செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

author-image
WebDesk
New Update
top 50 engineering colleges in tamilnadu under anna university, top 10 engineering colleges in tamilnadu under anna university 2022, டாப் 10 பொறியியல் கல்லூரிகள் இவை, தமிழ்நாடு, டாப் 10 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கலந்தாய்வு, top 10 engineering colleges in tamilnadu 2022, top 10 private engineering colleges in tamilnadu, top engineering colleges in tamilnadu rank wise, anna university colleges in tamilnadu, anna university affiliated colleges ranking list

Minister Ponmudi announces Engineering counselling new schedule: தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கியது. முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. பின்னர் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால், பொதுப்பிரிவு கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: நிறைய பணியிடம் இருக்கு… இந்த கோர்ஸ் படித்தால் அரசு வேலை கன்ஃபார்ம்?

இந்தநிலையில், நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பொறியியல் கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்ட கலந்தாய்வு - செப்டம்பர் 10 – 12 ஆம் தேதி வரை

2 ஆம் கட்ட கலந்தாய்வு - செப்டம்பர் 25 – 27 ஆம் தேதி வரை

3 ஆம் கட்ட கலந்தாய்வு - அக்டோபர் 13 -15 ஆம் தேதி வரை

4 ஆம் கட்ட கலந்தாய்வு - அக்டோபர் 29 - 31 ஆம் தேதி வரை

துணைக் கலந்தாய்வு - நவம்பர் 15 முதல் 17 ஆம் தேதி வரை

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த ஒதுக்ட்டைப் பொறுத்தவரை, அனைத்து சாதி இட ஒதுக்கீட்டிலும் 7.5% உள் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மேலும், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment