Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IISc Jobs: இந்திய அறிவியல் நிறுவன வேலை வாய்ப்பு; 76 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நாகப்பட்டினம் மாவட்ட நலச்சங்கம், தேசிய சுகாதார குழுமத்தில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னை தியாகராஜா கோயில் வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

துணை செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18 மாத துணை செவிலியர் பயிற்சி அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வட்டார கணக்கு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை வணிகவியல் படித்திருக்க வேண்டும்.

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, துணை இயக்குனர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் முதல் நுழைவுவாயில், நாகப்பட்டினம் - 611003

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/11/2022111486.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment