Advertisment

செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தலாம் : 3 வழிகளை பரிந்துரைத்த நிபுணர் குழு

சப்ஜெக்டிவ் டைப் - எழுத்து தேர்வு, மல்டிபல் சாய்ஸ் கேள்விகள்,  பாட ஆய்வு (கேஸ் ஸ்டடி) / திட்ட அடிப்படையிலான மதிப்பீடு' போன்ற மூன்று மாதிரிகளின் கீழ் ஆண்டின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த பரிந்துரைத்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தலாம் : 3 வழிகளை பரிந்துரைத்த நிபுணர் குழு

ஆண்டின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் எந்த வகையில் நடத்தலாம் என்பது குறித்து  அடுத்த வாரம் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், ஆன்லைன் கல்வித் திட்டத்தை பரவலாக்கவும், மேம்படுத்தவும், ஆன்லைன் தேர்வுகள் வைப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கவும் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் நாகேஸ்வர ராவ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த நிபுணர் குழு தனது அறிக்கையை சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசிடம் சமர்பித்தது.

நிபுணர் குழு ,"வெப் கேமரா கண்காணிப்பின் கீழ், சப்ஜெக்டிவ் டைப் - எழுத்து தேர்வு, மல்டிபிள் சாய்ஸ் தேர்வு, பாட ஆய்வு (கேஸ் ஸ்டடி) / திட்ட அடிப்படையிலான மதிப்பீடு' போன்ற மூன்று மாதிரிகளின் கீழ் ஆண்டின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த பரிந்துரைத்துள்ளது.

நாகேஸ்வர ராவ் அறிக்கையின் அடிப்படையில்,   பல்கலைக்கழக தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல்களை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானியக் குழு  வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பன்முகத்தன்மை, தொழில்நுட்ப வளர்ச்சி, மாணவர்களின் தயார்நிலை, உள்கட்டமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஆன்லைன் தேர்வுகளை கட்டாயமாக்கப் படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இருப்பினும், ஆண்டு இறுதி மதிப்பீடை  ஆன்லைன் மூலம் நடத்துவதில் ஆர்வம் காட்டும் உயர்க் கல்வி நிறுவனங்களுக்கு, மேற்படி கூறிய மூன்று மாதிரிகளை குழு பரிந்துரைத்துள்ளது. இந்த, காலசூழலுக்கு ஏற்ப, கல்வி நிறுவனங்கள் மூன்று மாதிரிகளிலும் மாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சப்ஜெக்டிவ் டைப் - எழுத்து தேர்வு : 

“கூகிள் வகுப்பறை செயலியில்,  'Quiz Assignment’  என்ற விருப்பத்தைப்   பயன்படுத்தி வினாத் தாள்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். எழுத்து தேர்வை அதிகபட்சமாக 1.5 மணி நேரமாகவும், ஒரு  செஷனில் 30 மாணவர்கள் வரை இருக்கலாம் . வெற்று தாளில் எழுதப்பட்ட பதில்கள் காலக்கெடுவிற்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என்று அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது .

 

அப்ஜெக்டிவ் டைப்- மல்டிபிள் சாய்ஸ் தேர்வு : மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் கொண்ட தேர்வு மதிபீட்டை ஆன்லைன் ப்ரொக்டர் சேவைகள் மூலம் நிர்வகிக்க குழு பரிந்துரைகிறது. வீடியோ/ஆடியோ மாறுபாடுகளை கணக்கில் கொண்டு தேர்வர்களின் நடத்தையை ஆன்லைன் ப்ரொக்டர் பிரத்தியோக மென்பொருள் சேவை கண்காணிக்கின்றது. ஜிமேட் (GMAT) மற்றும் ஜிஆர்இ (GRE)  போன்ற மதிப்புமிக்க  தேர்வுகள் ஆன்லைன் ப்ரொக்டரிங் மூலம் நடத்தப்படுகின்றன

சந்தேகம் எழும் மாணவர்கள் தங்கள் அறையை 360 டிகிரி கோணத்தில் காட்ட வேண்டும் என்று தேர்வின் போது ப்ரொக்டர்கள் நிர்பந்திக்கலாம். தேர்வுத் திரையில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு முதலில் எச்சரிக்கப் படவேண்டும் என்றும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எச்சரிக்கைகளுக்குப் பிறகு அவர்களின் தேர்வு நிறுத்தப்படலாம்" என்று அறிக்கை கூறுகிறது.

பாட ஆய்வு (கேஸ் ஸ்டடி) / திட்ட அடிப்படையிலான மதிப்பீடு :  இரண்டு மணி நேரம் அவகாசத்தில், மாணவர்களுக்கு ஒரு சிக்கலான கேஸ் ஸ்டடி (பாட ஆய்வு)கொடுக்கப்பட வேண்டும்.  அதற்கான தீர்வுகளை, மாணவர்கள் எழுத்துப் பூர்வமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பின்னர், அடுத்த நாள் கூகுள் மீட் செயலி மூலமாக, ஆன்லைன் பவர்பொயின்ட்  அல்லது  நேர்முகத் தேர்வை (viva ) நடத்த வேண்டும். இந்த நேர்முகத் தேர்வில், மாணவர்கள்  ஏற்கனவே சமர்ப்பித்த தீர்வை  மட்டும் முன்வைக்க வேண்டும்,”என்று அறிக்கை கூறுகிறது.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment