Advertisment

நீட் தேர்வு: டென்ஷனை உதறுங்க... வெற்றிக்கு உதவும் கடைசி நேர டிப்ஸ்

NEET 2020 Exam News: பெற்றோர்களின்  ஆதரவான அணுகுமுறை குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்க உதவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை

author-image
WebDesk
New Update
neet exam , nta.neet.nic.in, neet 2020 admit card,

நீட் தேர்வு

தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு (நீட்), மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில்  இத்தேர்வு நடைபெற இருப்பதால், மாணவர்கள்  முகக்கவசம்கையுறைகளுடன்  தேர்வு எழுதுவதை பயிற்சி செய்ய வேண்டும்.

Advertisment

நீட் ஆர்வலர்களுக்கான சில குறிப்புகள் இங்கே.

நம்பிக்கையுடன் இருங்கள்: வழக்கத்தை விட, இந்த ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுக்கு அதிக நேரம் கிடைத்தது என்று கூறலாம். மனதிற்குள் ஏதேனும் தயக்கம் (அ) அவநம்பிக்கை இருந்தால், உடனடியாக அதில் இருந்து மீண்டு வாருங்கள். கவலையும், பதட்டமும் நிச்சயமாக உங்களுக்கு உதவப் போவதில்லை. மாணவர்களே! ஏற்கனவே அறிந்ததையும், தெரிந்ததையும் கவனம் செலுத்துங்கள்.... ஒருமுறை திரும்ப பாருங்கள். என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள், வரைபடங்கள் விளக்கப்படங்கள், எழுதி வைத்த குறிப்புகள் போதுமானதாக இருக்கும். கடைசி நேரத்தில் பாடப்புத்தகங்களை ஆழமாக ஆராய்வதையும், தெரியாத பகுதிகளில் கவனம் செலுத்துவதையும்  தவிர்க்க வேண்டும்.

நீட் தேர்வில் நேரத்தை பக்குவமாய் செலவிட வேண்டும். ஓஎம்ஆர் தாளில் அதிக  கவனம் செலுத்த வேண்டும்.  ஓஎம்ஆர்  ஷீட்டில்  கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும். பதில்களை நிரப்புபோது நிதானத்தை இழக்க கூடாது. தெரிந்த பதில்கள் அனைத்தையும் வினாத்தாளில் முதலில் குறித்துக்  கொள்வது நல்லது. கேள்வித் தாளின் ஒரு பகுதியை முடித்த பிறகு, ஓஎம்ஆர் ஷீட்டில் நிரப்ப முயற்சி செய்யலாம்.

எண்ணியல் கணக்குகளைத் தீர்ப்பது கடினமாக இருந்தால், உயிரியல் மற்றும் வேதியியலை  பாடப்பகுதிகளில் அதிகம்  கவனம் செலுத்துங்கள். அதிகமான வெயிட்டேஜ் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துங்கள். அணுகுமுறையில் சில மாற்றங்களை கொண்டு வருவதையும் யோசியுங்கள். உதாரணாமாக, இயற்பியல் பாடத்தில் நீங்கள் வலுவானதாக இருந்தால், உயிரியல் (அ) வேதியியல் கேள்விகளை முதலில் தொடங்குகள். இது,  தேர்வின் போது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். கடினமான கேள்விகளை பின்னர் தீர்க்க தொடங்கலாம்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

பெற்றோர்களின் கடமை என்ன?  இது தங்கள் குழந்தையின்  எதிர்காலம் என்பதால், பெற்றோர்கள் பெரும்பாலும் அக்கறை காட்டுகின்றனர். இருப்பினும், தங்கள் எதிர்பார்ப்பை  குழந்தைகளிடம் திணிக்கக்கூடாது. குழந்தையின் செயல்திறனை கேள்வியாக்கக் கூடாது. இத்தகைய செயல், மாணவர்களின்  செயல்திறனை கடுமையாக பாதிக்கும். கடைசி நேரம் வரை,  குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்களின்  ஆதரவான அணுகுமுறை குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்க உதவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment