எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
கொரோனாவால் கடந்தாண்டு ஒதுக்கிவைக்கப்பட்ட நீட் தேர்வு, இந்தாண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 16.10 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், நீட் தேர்வின் ஆன்சர் கீ வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. இந்த ஆன்சர் கீ உதவியின் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கவிருக்கும் மதிப்பெண்ணை தோராயமாகக் கணக்கிட முடியும். இந்த ஆன்சர் கீயை neet.nta.nic.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆன்சர் கீ மூலம் மார்க் மதிப்பிடுவது எப்படி
step 1: ஆன்சர் கீயுடன் உங்கள் பதிலைக் கணக்கிடுங்கள்
step 2: அதிகாரப்பூர்வ ஆன்சர் கீ வெளியானதும், மாணவர்கள் அதனை நீட் OMR தாள் PDF-வுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்
step 3: மதிப்பெண்ணை அறிய சரியான மற்றும் தவறான பதிலை எண்ணுங்கள்
step 4: ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள் கணக்கிடுங்கள். அதே சமயம், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண்ணை மைனஸ் செய்யுங்கள்.
step 5: ஏதேனும் ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் டிக் செய்திருந்தால், அந்த கேள்வி பதிலளிக்கவில்லை என்றே கருதப்படும். அதற்கு, மார்க் கிடையாது.
நீட் தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
நீட் கட்ஆஃப்
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு கட்ஆஃப் மார்க் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் 2021க்கான எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப் மதிப்பெண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பிரிவு | கட்ஆஃப் சதவிகிதம் | கட் ஆஃப் மார்க் |
பொது பிரிவு | 50% | 710-130 |
எஸ்சி,எஸ்.டி,ஓபிசி | 40% | 120-98 |
பொது பிரிவு (ph) | 45% | 125 -90 |
எஸ்சி,எஸ்.டி,ஓபிசி (ph) | 40% | 110-90 |
டை பிரேக்கிங் ஃபார்முலா
இரண்டு மாணவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றால், அவர்களது மார்க்கை முடிவு செய்ய டை பிரேக்கிங் ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது. உயிரியலில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அப்போதும், டை நீடித்ததால், அடுத்ததால் வேதியியலில் அதிக மதிப்பெண் கணக்கிடப்படும். அப்போதும் மார்க் டையாகும் பட்சத்தில், அனைத்து தேர்விலும் குறைவான அளவில் தவறான விடைகளை எழுதியவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.