Advertisment

NEET UG 2022: கேள்வித்தாள் சற்றே கடினம்; நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும்?

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு; வினாத்தாள் எப்படி இருந்தது? இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும்? எத்தனை மருத்துவ இடங்கள் உள்ளன? முழுமையான தகவல்கள் இங்கே

author-image
WebDesk
New Update
புதன்கிழமை நீட் ரிசல்ட்: செக் செய்வது எப்படி?

NEET exam 2022 cut off analysis to Tamilnadu medical colleges: இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும்? கூடுமா அல்லது குறையுமா?, இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் உள்ளன, எத்தனை மருத்துவ இடங்கள் உள்ளன என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET-UG) தேசிய தேர்வு முகமை (NTA) இன்று ஜூலை 17-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் போட்டியிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: திருச்சி மண்டலம்: டாப் 25 பொறியியல் கல்லூரிகள் எவை?

இந்தநிலையில், தேர்வு கடினமாக இருந்ததாக சில மாணவர்களும், தேர்வு எளிதாக இருந்ததாக சில மாணவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் கட் ஆஃப் கூடுமா அல்லது குறையுமா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு தீர்வு தரும் விதமாக கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில், தமிழ்நாட்டில் நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும் என விளக்கியுள்ளார். அவர் தனது வீடியோவில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான கட் ஆஃப் தகவல்களை அளித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ் இடங்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் முழுவதும் 272 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 41388 இடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5200 இடங்கள் உள்ளன.

இந்தியா முழுவதும் உள்ள 260 தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 35540 இடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் உள்ள 19 தனியார் கல்லூரிகளில் 2900 இடங்களும் மற்றும் 12 தனியார் பல்கலைக்கழகங்களில் 2600 இடங்களும் உள்ளன.

இந்தியாவில் முழுவதும் 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் 1205இடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் உள்ள 1 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளில் 50 இடங்கள் உள்ளன. அடுத்ததாக புதுச்சேரி மற்றும் டெல்லியில் உள்ள ஜிப்மர் கல்லூரிகளில் தலா 100 இடங்கள் என மொத்தம் 200 இடங்கள் உள்ளன.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் முழுவதும் 549 மருத்துவக் கல்லூரிகளில் 78333 இடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் உள்ள 69 மருத்துவ கல்லூரிகளில் 10750 இடங்கள் உள்ளன.

அடுத்ததாக நீட் தேர்வைப் பொறுத்தவரை, தேர்வு ஆவரேஜ் ஆக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டை விட சற்று கடினமாக இருந்தது.

இதில் இயற்பியல் பகுதி ஈஸி- ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கணக்கியல் வினாக்கள் குறைவாகவும், நேரடி வினாக்கள் அதிகமாகவும் இடம்பெற்றிருந்தன.

வேதியியல் பகுதி, ஆவரேஜ் – கடினம் என்ற அளவில் இருந்தது. இந்தப் பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடையளிக்க அதிக நேரம் தேவைப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாவரவியல் பகுதி ஆவரேஜ் – கடினம் என்ற அளவில் இருந்தது. இந்தப் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் நீளமாக இருந்ததால், வினாக்களுக்கு விடையளிக்க அதிக நேரம் தேவைப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

விலங்கியல் பகுதி ஈஸி- ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நான்கு பகுதிகளிலும் வினாக்கள் NCERT புத்தகங்களில் இருந்து நேரடியாக கேட்கப்பட்டன. இந்த ஆண்டு நீட் தேர்வில், 11 ஆம் வகுப்பில் இருந்து 89 கேள்விகளும் 12 ஆம் வகுப்பில் இருந்து 111 கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.

கட் ஆஃப் எப்படி இருக்கும்?

நீட் தேர்வு கட் ஆஃப் மதிப்பெண்களை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு, இந்த ஆண்டு எவ்வளவு இருக்கும் என நாம் பார்க்கலாம். இது இந்தியா முழுமைக்கான கட் ஆஃப் மதிப்பீடு ஆகும்.

720 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் 2021ல் தரவரிசையில் முதல் இடம், 2022லும் தரவரிசையில் முதலிடம் கிடைக்கும்.

708 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் 2021ல் தரவரிசையில் 31 ஆவது இடம் கிடைத்த நிலையில், 2022ல் தரவரிசையில் 25 இடங்களுக்குள் கிடைக்கும்.

698 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் 2021ல் தரவரிசையில் 131 ஆவது இடம் கிடைத்த நிலையில், 2022ல் தரவரிசையில் 125 இடங்களுக்குள் கிடைக்கும்.

688 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் 2021ல் தரவரிசையில் 382 ஆவது இடம் கிடைத்த நிலையில், 2022ல் தரவரிசையில் 368 இடங்களுக்குள் கிடைக்கும்.

678 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் 2021ல் தரவரிசையில் 844 ஆவது இடம் கிடைத்த நிலையில், 2022ல் தரவரிசையில் 810 இடங்களுக்குள் கிடைக்கும்.

668 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் 2021ல் தரவரிசையில் 1625 ஆவது இடம் கிடைத்த நிலையில், 2022ல் தரவரிசையில் 1575 இடங்களுக்குள் கிடைக்கும்.

628 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் 2021ல் தரவரிசையில் 10545 ஆவது இடம் கிடைத்த நிலையில், 2022ல் தரவரிசையில் 10450 இடங்களுக்குள் கிடைக்கும்.

708 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் 2021ல் தரவரிசையில் 31 ஆவது இடம் கிடைத்த நிலையில், 2022ல் தரவரிசையில் 25 இடங்களுக்குள் கிடைக்கும்.

568 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் 2021ல் தரவரிசையில் 42759 ஆவது இடம் கிடைத்த நிலையில், 2022ல் தரவரிசையில் 42500 இடங்களுக்குள் கிடைக்கும். இந்த கட் ஆஃப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட் ஆஃப் ஆக பார்க்கப்படுகிறது.

438 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் 2021ல் தரவரிசையில் 164903 ஆவது இடம் கிடைத்த நிலையில், 2022ல் தரவரிசையில் 163900 இடங்களுக்குள் கிடைக்கும். இந்த கட் ஆஃப் எஸ்.சி வகுப்பினருக்கான கட் ஆஃப் ஆக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 2021ல் தமிழ்நாடு கவுன்சிலிங்கில் இடங்கள் கிடைத்த கட் ஆஃப் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.

அரசு மருத்துவ கல்லூரிகள்:

OC - 586

BC - 539

BCM -519

MBC - 509

SC - 430

SCA - 363

ST – 317

தனியார் மருத்துவ கல்லூரிகள்:

OC - 523

BC - 495

BCM - 484

MBC - 472

SC - 383

SCA - 300

ST – 280

இந்த ஆண்டு 2022ல் தமிழ்நாடு கவுன்சிலிங்கில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.

அரசு மருத்துவ கல்லூரிகள்:

OC - 584

BC - 536

BCM -518

MBC - 508

SC - 428

SCA - 363

ST – 317

தனியார் மருத்துவ கல்லூரிகள்:

OC - 518

BC - 490

BCM -581

MBC - 471

SC - 380

SCA - 300

ST – 275

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment