நீட் ஓஎம்ஆர் தாளில் முறைகேடா? குற்றச்சாட்டுகளை மறுக்கும் என்.டி.ஏ

அமைப்புடன் தொடர்புடைய  அதிகாரிகள் இத்தகைய நேர்மையற்ற செயல்களை செய்ய வாய்ப்பில்லை என்று என்.டி.ஏ தெளிவுபடுத்தியது.

Neet exam

மர்ம நபர்கள் சிலர், நீட் தேர்வு எழுதிய மாணவர்களிடம் தொலைபேசி மூலம் தங்களை என்.டி.ஏ  அதிகாரிகள் என்றும், ஓஎம்ஆர் தாளில் மாற்றம் செய்து மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாகவும்  தெரிவித்து வருகின்றனர் .

மாணவர்களின் புகாரினை விசாரித்த தேசிய சோதனை முகமை (என்.டி.ஏ) ,” தேசிய  சோதனை முகமையின் அதிகாரிகள் என்று கூறி மாணவர்களுக்கு தொலைபேசி  அழைப்புகள் வருகிறது. இது போன்ற, தொலைப்பேசி அழைப்புகள் வந்தால், மாணவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்” என்று தெரிவித்தது.

எவ்வாறாயினும், மாணவர்களின் புகார்களை நிறுவனம் நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது. “மாணவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை அணுகுவதற்கான வாய்ப்புகள் என்.டி.ஏ அமைப்பிடம்  இல்லை. எனவே, தங்களுடன் தொடர்புடைய  அதிகாரிகள் இத்தகைய நேர்மையற்ற செயல்களை செய்ய வாய்ப்பில்லை”என்று தனது அதிகாரப்பூர்வ  அறிவிப்பில்  என்.டி.ஏ தெரிவித்தது.

நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை பெறுவது, நுழைவுத் தேர்வை நடத்துவது, முடிவை அறிவிப்பது, அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலை சுகாதார சேவை இயக்குநரகத்துக்கு (டிஜிஹெச்எஸ்) அனுப்புவது போன்ற வரையறைக்குள் என்.டி.ஏ செயல்படுவதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவித்தது.

 

“நாட்டில் எந்தவொரு மருத்துவக் கல்லூரியிலும்  மாணவர்களின் சேர்க்கை தொடர்பான விசயங்களில் தலையிட என்.டி.ஏவிற்கு அதிகாரம் இல்லை. கலந்தாய்வுக்குப் பின்னர், நீட் தேர்வு மதிப்பெண்  அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.  மாணவர்களின் கலந்தாய்வை மருத்துவ கவுன்சில் கமிட்டி (எம்.சி.சி) நடத்துகிறது” என்றும் அது தெரிவித்தது.

செப்டம்பர் 13 அன்று நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ் , ஆயுஷ் உள்ளிட்ட மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு, 15.9 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.  கொரோனா பெருந்தொற்று காலத்திலும்,14.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வில் கலந்து கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Neet exam latest news nta rejects about neet omr sheet manipulation

Next Story
அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு: சிறப்பாக எழுதிய மாணவர்கள்!final year exam , anna university semester arrear Exam
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com